திருவள்ளூர் ஏப் 11- அறியாமை என்ற இருளை நூல்கள் அகற்றும் என்று மாநில செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன் தெரி வித்தார். திருவள்ளூரில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு பேசிய அவர்,தமிழ் இலக்கியத்தில் தண்டியலங்கா ரம் ஒரு பாடத்தை சொல்கிறது. இந்த உலகில் இருளை அகற்றுவது இரண்டு. அதில் ஒன்று ஒளிமிகுந்த கதிரோன். இன்னொன்று தமிழ் நூல்கள். அந்த இரண்டையும் சேர்த்து மூன்றாவதை ஒன்றை கூற விரும்பினால் புத்தக திருவிழா என்று கூறலாம். உலகின் இருளை அகற்றுவதற்கும் முத்தோர் அனுபவங்களையும் வரலாற்று நிகழ்வுகளாக அடுத்த தலைமுறைகளுக்கு எளிதாக புத்தங்களே கடத்தும் என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டின் புதிய அடை யாளமாக ஊர்தோறும் நடக்கக்கூடிய புத்தக காட்சியை பார்க்கின்றபோது அடுத்த தலைமுறைக்கான புதிய பண்பாடாக புத்தகம் திகழும் என்றும் அவர் குறிப் பிட்டார்.
விழிப்புணர்வு இலட்சினை
முன்னதாக இளம் வயது திருமணத்தை தடுத்து நிறுத்தி, உயர் படிப்பை தொடர பெண் குழந்தைகளை அனுமதிக்கவேண்டும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் “படிப்பினை உறுதி செய்” என்ற இலட்சினையை (லோகோ) மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளி யிட்டார்.