திருவள்ளூர், ஏப். 16 - பெரியபாளையம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இரண்டு இடங்களில் அரசு மகளிர் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. மாணவர் சங்கத்தின் திரு வள்ளூர் மாவட்ட மாணவி கள் மாநாடு சனிக்கிழமை யன்று (ஏப்.16) பெரியபாளை யத்தில் நடைபெற்றது. மாநாட்டில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மடிக் கணினி, இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண் டும், கல்வி வளாகங்களில் ஐசிசி கமிட்டி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டிற்கு மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.ஸ்வேதா தலைமை தாங்கி னார். துணைத் தலைவர் பி.சஹானா வரவேற்றார். கிளை செயலாளர் கே. ஆர்த்தி கொடியேற்றினார். எல்என்ஜி கல்லூரி மாணவி எஸ்.ஆர்.மிருளா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட குழு உறுப்பினர் கே.லட்சு மிஷேகால் வேலை அறிக் கையை முன்மொழிந்தார். முதுகலை ஆசிரியர் சங்க மகளிர் பிரிவு மாநில செயலாளர் எஸ்.லலிதா, மாணவிகள் உபக்குழுவின் மாநில நிர்வாகி எம்.காவியா, மாதர் சங்க மாவட்டத் தலைவர் கே.ரமா, தமுஎகச ஈரோடு மாவட்ட துணைச் செயலாளர் இ.கலைக்கோவன், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் மதன், செயலாளர் வசந்த் உள்ளிட்டோர் பேசி னர். சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி நிறைவுரை யாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் நமிதா நன்றி கூறினார். மாவட்ட ஒருங்கிணைப் பாளராக ஆர்.ஸ்வேதா தேர்வு செயப்பட்டார்.