திருவள்ளூர், ஜூலை 28 - கீழ்ச்சேரி மாணவி தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் சந்தேகம் தெரி வித்துள்ளார். திருத்தணி அடுத்த தெக்கலூரை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி, கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்நிலையில், மாணவி உயிரிழந்த விடுதி மற்றும் பெற்றோரிடம் தேசிய குழந்தை கள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனுங்கோ தலைமையி லான 7பேர் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசிய ஆணைய தலை வர், “விசாரணையில் குழந்தைகள் உரிமை மீறல் சம்பவம் நடைபெற்றது கண்ட றியப்பட்டுள்ளது. இறுதியாக சிபிசிஐடி போலீசார் தரும் அறிக்கையுடன் சேர்த்து மாணவியின் மரணம் குறித்த முழு அறிக்கை யும் விரைவில் மத்திய, மாநில அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம்” என்றார். “மாணவி மரணத்தில் விடுதி காப்பாள ராக உள்ள ஷெரினா என்பவர் மீது சந்தே கம் உள்ளது. அவரின் கெடுபிடியால் இந்த முடிவை மாணவி எடுத்தாரா என வும் சந்தேகம் இருப்பதாகவும்” தெரிவித்த ஆணையத் தலைவர், “விடுதியில் மாணவி இறப்பு குறித்து பெற்றோருக்கு உண்மையான தகவலை, உரிய நேரத்தில் தராமல், குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர்” என்றும் அவர் தெரிவித்தார்.