districts

img

பழங்குடியின மக்களுக்கு 15 நாட்களில் குடிமனைப்பட்டா பேச்சுவார்த்தையில் சாராட்சியர் வாக்குறுதி

திருவள்ளூர்,டிச 3- திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்தில் வேலகாபுரம், மெய்யூர், திருக்கண்டலம், வடமதுரை, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் பழங்குடி இன  மக்கள் குடிமனை பட்டா, தொகுப்பு வீடுகள், சுடுகாடு  போன்ற அடிப்படை தேவை களை நிறைவேற்றக்கோரி கடந்த ஓராண்டு காலமாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் போராடி வந்தனர். இந்தநிலையில்  மேற் கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில்,  டிசம்பர் 2 அன்று திரு வள்ளூர் சாராட்சியர் அலு வலகம் முன்பு பிரமாண்ட மான அளவில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ஆர் தமிழ் அரசு தலைமை யில், மாநில தலைவர் பி.டில்லிபாபு கலந்து கொள்ளும் காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து நவ 29 அன்று திருவள்ளூர் சார்  ஆட்சியர், சங்க தலைவர் களை அழைத்து பேச்சு நடத்தினார். அப்போது அடுத்த 15 நாட்களில் விண் ணப்பித்த அனைவருக்கும் குடிமனைப் பட்டா வழங்கப் படும். தொகுப்பு வீடுகள், சுடுகாடு போன்ற வற்றை யும் விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என சாராட்சியர் மகா பாரதி உறுதியளித்தார்.   இதில் ஊத்துக் கோட்டை வட்டாட்சியர் அருண்குமார், திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன், கடம்பத்தூர் பிடிஒ ஆ.சந்தானம், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்தர காந்த், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஆர்.தமிழரசு, தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன் னேற்ற சங்கத்தின் மாநில பொது செயலாளர் இ.கங்கா துரை.  மாவட்ட தலைவர் டில்லி, மாநில குழு உறுப்பி னர்கள் ஆறுமுகம், கண்ணா யிரம் மற்றும் சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், பூண்டி ஒன்றிய செயலாளர் கே.முரு கன்,  வாலிபர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கலையரசன் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர். சாராட்சியர் வாக்குறுதியை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

;