districts

img

சிபிஎம் போராட்டம் எதிரொலி: பேருந்து நிழற்குடை கட்டுமான பணி நிறுத்தம்

திருவள்ளூர், மே 18-  திருவள்ளூர் அருகி லுள்ள விஷ்ணுவாக்கத்தில்  ஒப்புகொண்ட இடத்தில் பேருந்து நிழற் குடை அமைக்காமல் சாதிய கண்ணோட்டத்தோடு வேறுஇடத்தில் கட்டுமானப் பணியை துவக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சிபிஎம் போராட்டம் நடத்தியது. இதன் விளைவாக நிழற்குடை கட்டுமான பணி நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பேச்சு வார்த்தையின் போது ஏற்றுக்கொண்டதை அமல்படுத்தாமல், நீதி மன்ற உத்தரவையும் மதிக்காமல் சட்ட விரோதமாக நிழற்குடை அமைக்கும் பணியை பிடிஒ மேற்கொண்டதால் மார்க்சிஸ்ட்கம்யூனி ஸ்ட்கட்சி சார்பில் செவ்வாயன்று (மே18) மறியல் போராட்டம்  அறிவிக்கப்பட்டுதுறை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஆர்ப்பாட்டமாக  நடைபெற்றது. இந்த போராட்டத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செய லாளர் ஆர்.தமிழ்அரசு தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ராஜேந்திரன், ஏ.ஜி.கண்ணன், இ.மோகனா, மாவட்ட குழு உறுப்பினர்கள் என்.கீதா, டி.மதன், என்.கங்காதரன், மூத்த தோழர் கே.செல்வராஜ், வட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.கலையரசன், கே.முருகன், கே.விஜயகுமார், இ.எல்.சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கட்டு மான பணியை நிறுத்தி வைப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

;