districts

img

10 ஆண்டில் பறிபோன 4 லட்சம் தொழிலாளர்களின் உயிர்கள்

திருவள்ளூர், ஜூன் 18- கடந்த 10 ஆண்டு கால, ஒன்றிய பாஜக ஆட்சியில் 1 லட்சத்து 12 ஆயிரம் விவ சாயிகளும், 3 லட்சத்து 12  ஆயிரம் தினக்கூலிகள் தற் கொலை செய்து கொண்டுள் ளனர் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஜு  கிருஷ்ணன் தெரிவித்துள் ளார்.

தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் செவ்வாயன்று (ஜூன் 18) திருவள்ளூர் மாவட் டம், கும்மிடிப்பூண்டியில் துவங்கியது. சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண் முகம் தலைமை தாங்கி னார். மாநில பொதுச் செய லாளர் சாமி. நடராஜன், மாநில பொருளாளர் கே.பி.  பெருமாள், மாநில நிர்வாகி கள் டி. ரவீந்திரன், பி. டில்லி பாபு, மாநில செயலாளர் பி.  துளசி நாராயணன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தை துவக்கி வைத்து, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஜு  கிருஷ்ணன் உரையாற்றி னார். அப்போது அவர் கூறிய தாவது:

வேளாண் அமைச்சர் தோல்வி!

“நடந்து முடிந்த மக்கள வை பொதுத் தேர்தலில், நாட்டு மக்கள் பாஜகவுக்கு தகுந்த பாடம் புகட்டியுள்ள னர். 400 தொகுதிகள் என்று பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். 

பாஜகவின் இந்த தோல்விக்கான முக்கிய கார ணங்களில், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவ சாயிகளின் சக்தி மிக்க  போராட்டமும் ஒன்று.வீரம் செறிந்த போராட்டம் நடை பெற்ற பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தோற்கடிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக விவ சாய அமைச்சர் அர்ஜுன் முண்டா தோற்கடிக்கப்பட் டார். உத்தரப்பிரதேசத்தில் தன் மகன் மூலம் காரை ஏற்றி விவசாயிகள் 5 பேரை கொலை செய்த ஒன்றிய இணையமைச்சரும் தோற் கடிக்கப்பட்டார்.

போராட்டம் தொடரும்!

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார  விலைக்கு, சட்டப் பாது காப்பு, விவசாயிகளின் கடன் தள்ளுபடி, மின்சார மசோதா, உரவிலை உயர்வு மற்றும் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் மீது விவசாயிகள் மேலும் போராட்டம் நடத்த வேண்டி யுள்ளது.

பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், அருந்ததி ராய் மீது உபா சட்டம் போட்டி ருப்பது மோடி அரசு இன்னும் திருந்தவில்லை என்பதற்கு அடையாளமாகும். இவ்வாறு விஜூ கிருஷ்ணன் பேசினார்.

அவரது உரையை சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் எஸ். துரைராஜ் மொழியாக்கம் செய்தார்.