districts

img

பொன்னேரியில் சாலைகளை சீரமைக்ககோரி அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

திருவள்ளூர்,  அக் 12- பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட சாலைகளை சீரமைக்க கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தியபோது அதி காரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம், குடிநீர்  வடிகால் வாரியம் சார்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு 54 கோடியே 48  லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொடங் கப்பட்டு 3 ஆண்டு காலத்தில் பணிகள்  முடித்திருக்க வேண்டும், ஆனால்  முன் அனுபவம் இல்லாத கட்டு மான நிறுவனத்திடம் பாதாள சாக் கடை அமைக்கும் பணி ஒப்படை க்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள 27 வார்டுகளிலும் ராட்சத கழிவு நீர் தொட்டி அமைப்பதற்காக சாலையின் நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டன. இந்த நிலையில் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை காரணம் காட்டி சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் பணிகளை கிடப்பில் போட்டதால் திட்டத்தை நிறைவேற்ற மேலும் 20  கோடியே 35 லட்ச ரூபாய் ஒதுக்கப் பட்டு, திட்டத்தின் மதிப்பு 74 கோடியே 75  லட்ச ரூபாய் ஆக  உயர்த்தப்பட்டது, இதனால் மக்க ளின் வரிப்பணம் 20 கோடி ரூபாய்க்கு மேல் விரயம் செய்யப்பட்ட போதி லும் 5 ஆண்டுகளுக்கு மேலாகி யும் பணிகள் நத்தை வேகத்தில் நடை பெற்று வருகிறது. பாதாள சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் அப்பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியு மாக காட்சியளிக்கிறது.

மேலும் சாலையோர கழிவுநீர் கால்வாய்கள் அடைப்பட்டு மழை நீருடன் கழிவு நீர் சாலைகளில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது,   இதேபோல் ஆலாடு, தத்தமஞ்சி, இடையே செல்லும் நெடுஞ்சாலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மெத்தனமாக நடைபெற்று வரு கிறது. இதனால் அந்த வழித்தடத் தில் இயக்கப்பட்டு வந்த பேருந்து கள் நிறுத்தப்பட்டன. இதன் காரண மாக பத்துக்கும் மேற்பட்ட கிராமங் களைச் சேர்ந்த மாணவர்கள், தொழி லாளர்கள்  சுமார் 15 கிலோமீட்டர் சுற்றி மீஞ்சூர் வழியாக பொன்னேரி  வர வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையில் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பொன்னேரி நகராட்சி அலுவ லகத்தை புதனன்று (அக் 12)  முற்றுகையிட்டனர். போராட்டக் காரர்களை  சமாதானப்படுத்த வந்த  நகராட்சி ஆணையர் தனலட்சுமியை முற்றுகையிட்டனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த பகுதி  சிறிது நேரம் பரபரப்பாக காணப் பட்டது. இதனைத் தொடர்ந்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி  அளித்ததை தொடர்ந்து போராட்டம்  தற்காலிகமாக விளக்கிக் கொள்ளப் பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.எம்.அனீப், குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;