districts

img

கண்ணீரில் தவிக்கும் பழங்குடி மக்கள்: கருணைக் காட்டுவரா? முதல்வர்

திருவண்ணாமலை,ஜுலை 6- திருவண்ணாமலை மாவட்டம் மல்லவாடி கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின இருளர் இன மக்களுக்கு  1957 ஆம் ஆண்டு அன்றைய அமைச்சர் கக்க னால் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுத்ததுடன் கூட்டாக பட்டாவும் வழங்கப்பட்டது. திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தும் கடந்த 65 ஆண்டு காலத்தில் அந்த இருளர் இன மக்களின் வீடுகளுக்கு தனியாக பட்டா வழங்காத கொடுமை நிலவி வருகிறது.  இதுகுறித்து அமைச்சர்கள், ஆட்சியர், சட்டமன்ற உறுப்பி னர்கள், பழங்குடி நலத் துறை யின் ஆணையர் உள்ளிட்ட அனை வருக்கும் கோரிக்கை மனுக்கள் அளித்தும் கூட பட்டா கிடைக்க வில்லை. சில மாதங்களக்கு முன்பு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கடசியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.ராமதாஸ் ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் திரு வண்ணாமலை கோட்டாட்சி யர் வெற்றிவேல் ஆகியோரை சந்தித்து இருளர் இன மக்க ளுக்கு தனி பட்டா வழங்க கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கை திருவண்ணாமலை வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இந்த மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள் தமிழக முதல் வர் திருவண்ணாமலை வரும்போது உங்களுக்கு தனி பட்டா கிடைக்கும் என உறுதியளித்தனர்.ஆனால், அதிகாரிகள் கூறியபடி பட்டா கிடைக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது.  இது குறித்து இருளர் இனத்தை சேர்ந்த சுப்பிரமணி கூறியபோது,   தமிழக அரசு மக்க ளுக்கு பல நல்ல  திட்டங்களை செயல்படுத்தினாலும், கீழ்மட்ட அதிகாரிகளின் அலட்சியம் காரண மாக எங்களை போன்ற  பழங்குடி யின மக்கள் பரிதவித்து வரு கிறோம் என்றார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நரிக்குரவர் வீடு களுக்கு சென்ற தமிழக முதல்வர், விளிம்புநிலை மக்களைத் தேடிச் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கும் அரசாக திமுக அரசு உள்ளதாக தெரிவித்தார். ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில், விலிம்பு நிலை யில் உள்ள பழங்குடியின மக்க ளுக்கு ஆதரவாக, அரசு செயல்பட வில்லையே என்ற ஏக்கத்தில் மக்கள் தவித்து வருகின்றனர்.