திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கல்லாங்குத்து ஊராட்சியில் பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது வீடு தீவிபத்தில் முழுவதுமாக எரிந்து விட்டது. தகவல் கிடைத்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் அ. அப்துல் காதர், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம். மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப. செல்வன், வீரமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து நிவாரண பொருட்கள் வழங்கினார்.