districts

img

மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, மார்ச் 25- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் அனக்காகூர் ஊராட்சி ஒன்றிய  அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தப் பட்டது.  மலை சங்க மாவட்டச் செயலா ளர்  மாரிமுத்து தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் இரா.சர வணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ந.ராதா கிருஷ்ணன், சிஐடியு பொது தொழிலா ளர் சங்க செயலாளர் வே.சங்கர், வட்டார செயலாளர் எஸ்.விஜயா மற்றும் பலர் உரையாற்றினர். பழங்குடி மக்களின் தொகுப்பு வீடு திட்டத் தொகையை  ரூபாய் 6 லட்சமாக  உயர்த்தி கொடுக்க வேண்டும், இடிந்து விழும் நிலையிலுள்ள தொகுப்பு வீடு களை ஆய்வு செய்து புதிதாக வீடுகள்  கட்டி கொடுக்க வேண்டும், அனக்கா கவூர்  ஒன்றியத்தில்,  பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில்,  குடிநீர்,  சாலை வசதி, தெருவிளக்கு அமைக்க  வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத் தில் வலியுறுத்தப்பட்டது. பின்னர் வட்டார வளர்ச்சி அலு வலரை சந்தித்து கோரிக்கை மனு  கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரி, உரிய நடவடிக்கை  எடுக்கப்படும் என்று உறுதியளித் துள்ளார்.