திருவண்ணாமலை, டிச.23- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், அரியாகுஞ்சூர் கிராமத்திலிருந்து கலத்தாம்பாடி, அரியாகுஞ்சூர் முதல் அரட்டவாடி வரைக்கும் உள்ள சாலையை தார் சாலையாக மாற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் (டிச.22) நடை பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்காக அரியாகுஞ்சூர் கிராமத்தில் ஒன்று திரண்டனர். இந்த நிலையில், ஊராட்சி மன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டினர். இதில் ஊராட்சி மன்றத் தலைவர் எம். முருகேசன், மற்றும் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலர், செங்கம் துணை காவல் கண்காணிப்பாளர், வனச்சரக அலுவலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர் எம். வீரபத்திரன்,பிரகல நாதன், வட்டாரச் செயலா ளர் ஏ.லட்சுமணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பலராமன், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், இரண்டு வழித்தடங்களிலும் தார் சாலையாக மாற்றப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.