திருவண்ணாமலை தீபத்திற்கு சென்று திரும்பி வரும்போது மதுராந்தகம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லாவரம் பகுதி, தாங்கல் கிளை உறுப்பினர் தோழர் சந்திரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் கிளைச் செயலாளர் தாமோதரன் ஆகியோர் அகால மரணமடைந்தனர். அவர்களது உடலுக்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம். தாமு உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.