திருவண்ணாமலை,பிப். 16- திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூரராட்சி வார்டு எண் 1 இல் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் மா. கௌதம் முத்துவுக்கு சுத்தியல், அரிவாள், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் கோரி வைகறை இசைக்குழுவின் கலை நிகழ்ச்சியும், பரப்புரையும் நடைபெற்றது. இந்நிகழ்வில் வேட்பாளர் கௌதம் முத்து, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பெரணமல்லூர் சேகரன், எஸ். ராமதாஸ், ப. செல்வன், இடைக்குழு உறுப்பினர்கள் இரா. ராஜசேகரன், பி.கே. முருகன் தி.மு.க. நிர்வாகிகள் ஒன்றியக் குழு உறுப்பினர் ஏழுமலை, நிர்வாகிகள் குணசேகரன், திருஞானம் வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.