திருவண்ணாமலை, ஜன. 25- திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் ஊராட்சி சர்வேசா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (41). இவர் செவ்வாயன்று வேலூரில் நடைபெற்ற அவரது உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு தனது குடும்பத்துடன் சென்றிருந்தார். இந்நிலையில் புதன் கிழமை காலை ரமேஷ் வீட்டின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் வேலூரில் இருந்து திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஜன்னல் உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 சவரன் நகைகள், ரூ.20 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர் திரு வண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.