districts

img

உடுமலை : கனிமவளங்களை கடத்திய வாகனங்களை சிறை பிடித்த பொதுமக்கள்

கனிமவளங்களை கடத்திய வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

அண்டை மாநிலங்களுக்கு எம்சாண்ட் மணல் கொண்டு செல்வது சட்டவிரோதம் என்ற நிலையில் தொடர்ந்து கேரளாவுக்கு மண் கொண்டு செல்லவதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.

உடுமலை மற்றும் மடத்துகுளம் தாலுக்கா பகுதியில் கடந்த சில மாதங்களாக கனிமவளங்களை சட்டவிரோதமாக கடத்துவது  தடுக்காமல் அரசு அதிகாரிகள் உள்ளதால், பொதுமக்களே 22 ஆம் தேதி புதன்கிழமை அமராவதி காவல்நிலையத்திற்கு உட்பட்ட 9/6 செக்போஸ்ட் பகுதியில் கேரள மாநிலத்திற்கு செல்லும் வாகனத்தை சிறை பிடித்தார்கள். இந்த மூன்று வாகனத்தில் இரண்டில் எம்சாண்ட் மணலும் ஒன்றில் ஜல்லி கற்கலும் இருந்துள்ளது.

கனிமவளங்கள் நிறைந்த பகுதியான இங்கிருந்து பல  நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு கல்  மற்றும் மண்களை அரசின் முறையான அனுமதி எதுவும் இல்லாமல் எடுத்து வருகிறார்கள். எவ்வித அனுமதியும் இல்லாமலும் அரசு விதிகளை மதிக்காமல் இயற்கை வளங்களை சுறையாடுவதை  அனைத்து அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

இப்பகுதியில் நடைபெறும் முறைகேடுகளை பொதுமக்கள் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்ல இருந்த மூண்று லாரிகளை 9/6 செக்போஸ்ட் பகுதி பொதுமக்கள் சிறை பிடித்து சமுக வலைதளங்களில் பரப்ப தொடங்கிய நிலையில், பல மணி நேரங்களுக்கு பிறகு காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் வந்து அமராவதி காவல்நிலையத்திற்கு வாகனம் கொண்டு செல்லப்பட்டது.

காலை 6 மணிக்கு பொதுமக்களால் பிடிக்கபட்ட வாகனங்கள் மீது மாலை 6 மணி வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மாலையில் உடுமலை வட்டாச்சியர் அலுவலகத்திற்கு வாகனத்தை கொண்டு வந்துவுள்ளார்கள்.

அண்டை மாநிலங்களுக்கு எம்சாண்ட் மணல் கொண்டு செல்லக்கூடாது என்ற விதி முறைகள் இருந்த போதும், கனிமவளங்களை கடத்தியவர்கள் மீது காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் எவ்வித சிறிய நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது அனைரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வட்டாச்சியர் ராமலிங்கதிடம் கேட்ட போது, மூன்று லாரிகளை பொதுமக்கள் பிடித்து உள்ளார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன் வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு செய்பட்டதன் பேரில், அமராவதி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்ய  கடிதங்கள் கேட்டதன்  அடிப்படையில், வருவாய் துறை அதிகாரிகளிடம் பறிமுதல் செய்யபட்ட வாகனங்களை உடுமலை வட்டாச்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது என்றார்.

அமாரவதி காவல் நிலைய தனிபிரிவு காவல்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது யாரும் போன் எடுக்கவில்லை.

சட்டவிரோத மணலை கடத்தியவர்கள் மீதும் மணலை விற்பனை செய்த குவாரிகள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிக்கள் மீது காலை முதல் மாலை வரை சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை. 

தவறு செய்த அனைத்து அதிகாரிகள் மீதும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

 

;