districts

போக்குவரத்து விதி மீறல்: பல்லடத்தில் 1,351 பேர் மீது வழக்கு

திருப்பூர், மே 28- பல்லடத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய  1,351 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள் ளது என போக்குவரத்து காவல்துறையினர் தெரி வித்துள்ளனர்.  திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவின் பேரில், பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளர் வெற்றிச்செல்வன் மேற்பார்வையில் பல்லடம் போக்குவரத்து ஆய் வாளர் திருநாவுக்கரசு தலைமையில் போக்குவ ரத்து போலீசார் பல்லடம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருசக்கர வாக னங்களில் செல்கையில் தலைக்கவசம் அணியா மல் சென்ற 394 பேர் மீதும், மதுபோதையில் வாக னங்களில் சென்ற 26 பேர் உட்பட போக்குவ ரத்து சிக்னலை மதிக்காமல் செல்வது, நான்கு சக்கர வாகனங்களில் செல்கையில் சீட்பெல்ட் அணியாமல் செல்வது, அதிகபாரம் ஏற்றிச்செல் வது என்பன உள்ளிட்ட பல்வேறு விதமான போக் குவரத்து விதிகளை மீறிய 1,351 பேர் மீது வழக் குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர்களிடமி ருந்து அபராதமாக ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்து 200 வசூலிக்கப்பட்டது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந் துரை செய்யப்பட்டு 230 நபர்களின் ஓட்டுனர் உரிம மும் ரத்து செய்யப்பட்டுள்ளது என பல்லடம் போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்த னர்.

;