districts

img

அமராவதி ஆற்றில் முதலைகள்:பொதுமக்கள் அச்சம்

உடுமலை, ஜன.19- உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து வெளியேறிய ஒரு சில முதலைகள் கரையோரத்தில் நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ள னர். உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்கள் குடிநீர் வசதி பெற்று வருகிறது. இந்நிலையில் குடிநீர் வசதிக்காக வும், பாசனத் தேவைகளுக்காகவும் அமராவதி ஆற்றில் தண் ணீர் திறந்து விடப்பட்டது. இதில் அமராவதி அணையில் இருந்து வெளியேறிய ஒரு சில முதலைகள் கரையோரத் தில் நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள் ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக ஆற்றுக்குள் இருந்த முதலை அருகில்  உள்ள விளை நிலங்களில் நடமாடி வருகிறது. இதனால் கண் ணாடிப்புத்தூர், கொமரலிங்கம், கொழுமம், மடத்துக் குளம் பகுதி மக்கள் அச்சத்திற்குள்ளாகி இருப்பதாக தெரி வித்தனர்.  வனத்துறையினர் தரப்பில் கூறுகையில், அமராவதி அணையில் ஏராளமான முதலைகள் உள்ளன. வழக்க மாக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் போது அணை யில் உள்ள முதலைகள் பிரதான ஷட்டர் வழியாக அமரா வதி ஆற்றிற்குள் சென்று விடும். அதனால், பொதுமக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம். முதலைகளை பார்த் தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனர்.

;