அவிநாசி, ஜூன் 12-
திருப்பூரில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு எதிர்ப்பு தினம் கையெழுத்து இயக்கம், கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூரில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு எதிர்ப்பு தினம் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை மற்றும் விழுதுகள் தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, விழிப்புணர் பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கலந்துகொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனைதொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் அலுவலர்களுக்கு குழந்தை தொழி லாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் விநியோகிக் கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், தொழிலா ளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயக் குமார் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.