districts

ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் சிபிஎம் திருப்பூர் நூலகத்திற்கு வழங்கல்

திருப்பூர், ஏப்.3- பல்லடம் அருகே நடுவேலம்பா ளையத்தைச் சேர்ந்த, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் திருப்பூர் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ஜெக நாதன் தனது வீட்டில் சேமித்து வைத் திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புத்த கங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட நூல கத்துக்கு வழங்கினார். கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் லெனின் தேர்வு நூல்கள், மூல தனம் நூல் உள்பட அடிப்படை நூல் கள், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு, காந்தி பற்றிய நூல்கள் என ஏராளமான நூல்களை ஜெகநாதன் ஞாயிறன்று கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணனிடம் வழங்கினார். உடன் கட்சியின் பல்ல டம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசி வம் உடனிருந்தார்.

;