திருப்பத்தூர், ஜன.29 - திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த இருணாபட்டு பகுதியைச் சேர்ந்த மேகநாதன் (38). இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. இவரது நிலத்தின் அருகேயுள்ள மலைப்பகுதியில் இருந்து ஏராளமான மயில்கள் உணவு தேடி இவருடைய நிலத்திற்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் அவர் மயில்களை கொல்வதற்காக எலிக்கு வைக்கக்கூடிய குரணை என்ற விஷத்தை உணவில் கலந்து வைத்துள்ளார். உணவு தேடி வந்த 7 மயில்கள் அதை சாப்பிட்டு இறந்து கிடந்தன. இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் பிரபுவுக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலர் நாக் சதீஷ் கிரிஜல உத்தரவின் பேரில் அலுவலர்கள் மேகநாதனை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.