districts

img

திருப்பத்தூரில் மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம் வெற்றி!

திருப்பத்தூர். ஜூலை 3 - தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் ஜவ்வாது மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது.

பெற்றது. சங்க நிர்வாகிகள் எல்.ஜெயராமன் டி.காளி வி.கோவிந்தன் வ.சுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை ஜவ்வாது மலைவாழ் மக்கள் சங்கத்தின் கவுரவ தலைவர் ஆர்.ஏ.லட்சுமணராஜா துவக்கி வைத்து பேசினார்.

மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம்,  தவிச மாநில செயலாளர் பி.துளசி நாராயணன், மாவட்ட செயலாளர் கே.சாமிநாதன்,  சிபிஎம் தாலுகா செய லாளர் எம்.காசி,  சி.கேசவன், காமராஜ்,  ரங்கன், ரவி உள்ளிட்டோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினார்.

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வன உரிமைச்சட்டம் குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளித்தும், ஒன்றிய அரசிதழில் வெளியிடப்பட்ட வன உரிமைச் சட்டத்தினை தமிழகத் தில் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

அந்த சட்டத்தை அமல்படுத்தி ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கு அவர்கள் பயிர் செய்துவரும் நிலங்க ளுக்கும், வீடுகளுக்கும், மரங்க ளுக்கும் பட்டா வழங்க வேண்டும். வனத்துறை வருவதற்கு முன்பு என்னென்ன உரிமைகள் மக்கள் அனு பவித்து வந்தார்களோ அந்த உரிமை கள் அனைத்திற்கும் சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். நடுக்குப்பம் முதல் விளாங்குப்பம் வரை தார்சாலை அமைக்க வேண்டும், கம்புகுடி செல்லும் இணைப்பு சாலையில் இருந்து கொத்தனூர் வரை செல்லும் சாலையை  தார்சாலையாக அமைக்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர்கள் பேசினர்.

பின்னர் சங்க நிர்வாகிகளோடு சார்ஆட்சியர் பேச்சு வார்த்தை நடத்தி னார். பேச்சுவார்த்தைக்குபின் போராட்டக் களத்திற்கு வந்த மாநிலத் தலைவர் பி.டில்லிபாபுஏலகிரி  முத்தா னூர் கிராமத்தில் உள்ள அனுபவத்தில் நிலங்களுக்கு உடனடியாக பட்டா வழங்கப்படும், கோட்டூர் பகுதியில் உள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட வீடு களுக்கு,  பட்டா வழங்குவதாக சார் ஆட்சியர் தெரிவித்ததாகவும், அதே போன்று புதூர் நாடு மலை பகுதியில் உள்ள விளை நிலங்களில் பயன்படுத்த க்கூடிய ஜேசிபி வாகனம் மற்றும் டிராக்டர் போன்றவற்றை பயன்படுத் திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். சுமார் 50 ஏக்கர் விளை நிலங்களுக்கு பட்டா வழங்கப்படுவதாகவும், வனத் துறை சார்பில் குடிநீர் குழாய் அமைப் பதற்கும் அனுமதி வழங்கப்படு வதாகவும் சார்ஆட்சியர் தெரிவித்தார்.

சார் ஆட்சியருடன்  நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்ட தால் போராட்டம் முடித்துக் கொள்ளப் பட்டது.

;