திருநெல்வேலி,ஜன.17- நெல்லை அருகே உள்ள மேலச்செவல் பழைய கிராமம் தெருவை சேர்ந்த வர் கிருஷ்ணன் என்ற கிட்டு சாமி. இவர் அப்பகுதியில் உள்ள நவநீத கிருஷ்ணன் சுவாமி கோவிலில் தற்கா லிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலை யில் ஞாயிற்றுக்கிழமை இரவு கோவில் வளாகத்தில் அவர் கொலை செய்யப் பட்டு கிடந்தார். இது தொடர்பாக முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன் மற்றும் காவல் நிலையத்தார் வழக்குப் பதிவு செய்து மேலச் செவலை சேர்ந்த கொம்பை யா ( 19), செல்லக்குட்டி என்ற துரை(23), பாலச்சந்துரு (23), அருண் இசக்கிப் பாண்டி(19), மாரியப்பன் (19), பற்பநாதன்(19) அய்யப் பன் ( 23) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவில் வளாகத்தில் மது அருந்தி யதை தட்டி கேட்டதால் கிருஷ்ணன் என்ற கிட்டுவை ஆத்திரத்தில் கொன்றதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற் கிடையே கொலை செய்யப் பட்ட கிருஷ்ணன் என்ற கிட்டுவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க கோரி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களுடன் முன்னீர் பள்ளம் காவல் ஆய்வாளர் தில்லைநாகராஜன் தலை மையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்பட வில்லை. இந்நிலையில் 2-ஆவது நாளாக செவ் வாய்க்கிழமை அவர்கள் கிருஷ்ணன் உடலை வாங்க மறுத்து போராட்டத் தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மேலச்செவலில் காவல் துறையினர் குவிக் கப்பட்டு பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனை செய் யப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் வைக் கப்பட்டுள்ளது. இதனால் அங்கும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர்.