districts

அதிக நபர்களை ஏற்றிச் சென்ற  ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அபராதம்

திருநெல்வேலி, ஜூன் 28 - நெல்லை மாநகர பகுதியில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களில் குறிப்பிட்ட அளவைவிட கூடுதலாக மாணவர்களை ஏற்றி செல்வதாக நெல்லை மாநகர  போலீஸ் கமிஷனருக்கு ஏற்கனவே புகார்கள் வந்தன.  மேலும் ஆட்டோவில் குறிப்பிட்ட அளவைவிட கூடுத லாக பயணிகளை ஏற்றி செல்கிறார்கள். இதனால் விபத்து அடிக்கடி நடக்கிறது எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த  நிலையில்  பாளையங்கோட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து  பள்ளி மாணவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.  இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆட்டோக்களில் குறிப்பிட்ட அளவை விட கூடுதலாக பயணிகளை ஏற்றி  செல்லும் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்க மாநகர  போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் உத்தரவிட்டார். அதன்  பேரில் துணை கமிஷனர் சீனிவாசன் நேரடி மேற்பார்வை யில் மாநகர பகுதியில் உள்ள அனைத்து காவல்  ஆய்வா ளர்களும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட அளவை விட கூடுதலாக பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவை மறித்து அந்த ஆட்டோக்களின் ஓட்டுநர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். 

;