districts

img

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் உலக கண் பார்வை தின விழிப்புணர்வு

திருச்சிராப்பள்ளி, அக்.13 - திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ஆண்டுதோறும் உலக கண்பார்வை தினத் தன்று மக்களுக்கு கண் பார்வை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.  உலக சுகாதார நிறுவன கணக்கின்படி, ஆண்டுதோறும் சுமார் 43 மில்லியன் மக்கள் கண் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் உலக பார்வை தினமான வியாழனன்று திருச்சி ஜோசப் கண் மருத்து வமனை, ரோட்டரி கிளப் ஆப் திருச்சி பட்டர்பிளைஸ், டயமண்ட் சிட்டி குயினஸ் மற்றும் ஜமால்முகமது கல்லூரி இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. மாநகர துணை காவல் ஆணையர் அன்பு, உதவி காவல் ஆணையர் குத்தா லிங்கம் ஆகியோர் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதில் ஜமால் முகமது கல்லூரியைச் சார்ந்த மாணவ, மாணவிகள், கல்லூரி செய லர் காஜா நஜீமுதீன், கல்லூரி முதல்வர் முகமது இஸ்மாயில், ஜோசப் கண் மருத்துவ மனை இயக்குநர் டாக்டர் பிரதீபா ஆகி யோர் முன்னிலையில், கண்கள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  அதனைத் தொடர்ந்து ரோட்டரி மாவட்டம் 3000-ன் முன்னாள் ஆளுநர் கோபால்  விழிப்புணர்வு பலூனை பறக்க விட்டார்.  இதில் ரோட்டரி பட்டர்பிளை, டயமண்ட் சிட்டி  குயின்ஸ் சங்கங்களின் தலைவர்கள் மற்றும்  உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதி காரி சுபா நன்றி கூறினார்.