மயிலாடுதுறை, பிப்.27- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கத்தில் தமிழ் வளர்ச்சித் துறை யால் அண்ணல் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்த நாள்களை முன்னிட்டு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி-கல்லூரி மாணவர்கள் 16 பேருக்குப் பரிசுத் தொகைகளுக்கு உரிய காசோலைகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மயிலாடு துறை மாவட்ட வருவாய் அலுவலர் சோ. முருகதாஸ் வழங்கி பாராட்டினார். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் இரா.அன்பரசி, மயிலாடுதுறை திருக்குறள் பேரவைத் தலைவர் தமிழ்ச்செம்மல் விருதா ளர் முனைவர் சி.சிவசங்கரன், குத்தாலம் முத்தமிழ் அறிவியல் மன்றத் தலைவர் செ. நடராசன், தமிழ் வளர்ச்சித் துறை உதவியா ளர் ஆ.லியாகத்அலி, தமிழ் வளர்ச்சித் துறைப் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.