districts

img

குப்பைத் தொட்டியாக மாறிய குளம் நாகை நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

நாகப்பட்டினம்,  ஜன.22 - நாகப்பட்டினம் நகரா ட்சிக்குட்பட்ட வெளிப்பா ளையம் முகமதியர் தெரு வில் உள்ள  புதுப்பள்ளிவாசல்  பின்புறம் உள்ள நகராட்சிக் குட்பட்ட குளம் குப்பைகளா லும் கழிவுநீராலும் மாச டைந்து காணப்படுகிறது. நாகப்பட்டினம் நகராட்சி க்கு உட்பட்ட குளம் மாச டைந்து இருப்பதை சிபிஎம் நாகை நகர குழுவினர், நக ராட்சி ஆணையரிடம் மனு வாக அளித்துள்ளனர். அக்கு ளத்தின் அருகில் குடியிருப்பு கள் இருப்பதாலும், குளத் திற்கு அருகில் கழிவுநீர் கால்வாய் செல்வதாலும் குளத்தின் நீர் மாசடைந்து காணப்படுகிறது. மேலும் கடும் துர்நாற்றத்துடன், குப்பைகள் சூழ்ந்த பகுதி யாக காட்சியளிக்கிறது. இந்த  குளத்தை தூய்மைப்படுத்தி கழிவுநீர் கால்வாயை புதி தாக அமைத்து குள த்தை பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். குளத்தின் அருகே செல்கிற திறந்தவெளி சாக்கடை கால்வாயை பாதாள  சாக்கடையாக மாற்றி, கழிவு நீர் குளத்திற்குள் உட்புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உடனடியாக அங்கு கொட் டப்பட்டிருக்கும் குப்பை களை அகற்றி குளத்தினை தூய்மைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர். நாகை நகரக் குழு சிபிஎம் செயலாளர் க.வெங்கடேஷ். நகர குழு உறுப்பினர்கள் வி. சுந்தர், ஏவிஎம் பகத்சிங், டி. தினேஷ்பிரபு, சிஐடியு சு. மணி, எம்.இராமு ஆகியோர் நகராட்சி ஆணையரை சந்தித்து மனு கொடுத்தனர்.