districts

img

படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள்

பாபநாசம், ஜூலை 28- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா தலைநகரத்திலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு கும்பகோணம் செல்கின்றனர்.  வேலை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக ஏராளமானோர் கும்பகோணம் செல்கின்றனர்.  காலையில் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்கின்றனர்.  இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறுகையில், “பாபநாசம் மற்றும் இதைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு அரசு கலை, அறிவியல் கல்லூரி இல்லை. 40 ஆண்டுகளாக மக்களின் கோரிக்கை ஏற்கப்படாமலே உள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவது மாணவ-மாணவிகள்தான்.  காலை 8 மணி முதல் 9 மணி வரை கூடுதலாக நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும். பாபநாசத்தில் உள்ள பயணியர் நிழற்குடை நிற்க இடமின்றி ஏராளமான பயணிகள் சாலையில் நிற்கின்றனர்.  எம்.எல்.ஏ, எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பாபநாசத்தில் பயணியர் நிழற்குடை கட்டித்தர வேண்டும்.  மாணவர்கள் கணினி கற்றுக்கொள்ள பாபநாசத்தில் தனியார் மூலமாவது கணினி மையம் அமைக்க வேண்டும். பாபநாசம் தொகுதியுடன் தொடர்புடைய கல்யாணசுந்தரம், சண்முகம், வாசன், சுதா என 4 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்” என்றார்.