districts

img

திமுக இளைஞரணி வாகனப் பிரச்சாரத்திற்கு வரவேற்பு

மயிலாடுதுறை நவ-23- நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி யும், மாநில உரிமை மீட்பை முன் வைத்தும் திமுக இளைஞர் அணியினர் மேற்கொள்ளும் இரு சக்கர வாகன பிரச்சாரம்  புதனன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் வந்த டைந்தது. மாவட்ட எல்லையான தரங்கம்பாடி மாநில எல்லை சோதனைசாவடி அருகேயுள்ள ராஜூவ்புரத்தில் மாவட்ட செயலாளரும்,பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் தலைமையில் நூற்றுக் கணக்கானோர் இருசக்கர வாகன பிரச்சாரத்தில் பங்கேற்ற வர்களுக்கு மலர் தூவி முழக்கமிட்டு வரவேற்பளித்தனர்.