அரியலூர், ஜன. 11- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி கிரா மத்தைச் சேர்ந்தவர் கோவிந் தன் (72). வயது மூப்பின் கார ணமாக அரசு வழங்கும் 1000 ரூபாய் பணத்தை வைத்து வாழ்ந்து வரும் நிலையில், இந்த மாதம் பணம் எடுக்க சேவை மையத்தை நாடி உள்ளார். அப்போது வங்கி கணக் கில் பணம் இருந்த நிலை யில் கைரேகை பதிவாகாத தால் எடுக்க முடியவில்லை. இதனால் அடுத்த கட்ட மாக ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள ஸ்டேட் பேங்கிற்கு நேரடியாக சென்று கா சோலை எழுதி கொடுத்து பணம் கேட்டுள்ளார். அப் போது அங்கிருந்த அதிகாரி, நீங்கள் இறந்து விட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் உங்கள் கணக்கி லிருந்து பணம் எடுக்க முடிய வில்லை என கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோவிந்தன், என்ன செய்வதென்று தெரி யாமல் அதிகாரியிடம் கேட்ட போது, தாங்கள் உயிரு டன் இருப்பதற்கான சான்றி தழை கிராம நிர்வாக அதிகாரியிடம் வாங்கி வரு மாறு கூறியுள்ளனர். இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரியை முதிய வர் கோவிந்தன் சந்தித்த போது, அவர் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் வழங்கியிருக்கிறார். அதனை கொண்டு சென்று வங்கி நிர்வாகத்திடம் அளித்த போது, வங்கி நிர்வாகம் ஏற்க மறுத்து மீண்டும் தாசில்தாரி டம் சான்றிதழ் வாங்க அறி வுறுத்தியுள்ளது. பின்னர், தான் உயிரு டன் இருப்பதற்கான சான்றி தழ் வாங்க முதியவர் கோவிந் தன், ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில், தான் உயிருடன் இருப்ப தற்கான சான்றிதழ் வாங்க மனு அளித்துள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் ஆனந்தன், வங்கியில் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கும், மேற்கொண்டு அரசு வழங்கும் ரூ.1000 கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி யளித்து அவரை அனுப்பி வைத்தார். இதையடுத்து கோ விந்தன் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து வீடு திரும்பி னார்.