districts

img

கால்நடை விழிப்புணர்வு முகாம்

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை மற்றும் விழிப்புணர்வு முகாம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே பட்டுக்குடியில் நடைபெற்றது. முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் கபிஸ்தலம் வடிவேலன், ஆதனூர் சரவணன், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவி சுமதி, ஊராட்சி மன்றத் தலைவர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்கல், குடற்புழு நீக்கல், சினைப் பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.