districts

img

திருச்சி என்.ஆர். ஐஏஎஸ் அகாடமியில் வெற்றி விழா

மயிலாடுதுறை, செப்.26 - மயிலாடுதுறை அருகே உள்ள ஏவிசி  கல்லூரியில் ஆசிரியர் தின விழா நடை பெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.நாக ராஜன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தி னராக ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக  அதிகாரியும் சென்னை உயர்நீதிமன்ற முன் னாள் நீதிபதியுமான கே.வெங்கடராமன் கலந்து கொண்டார். கல்லூரியில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து  வரும் பேராசிரியர்கள் மற்றும் சிறந்த ஆய்வு  இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும்  புத்தகங்கள் வெளியிட்ட பேராசிரியர்களுக்கு  பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். இதில் ஏவிசி கல்லூரி தேர்வு கட்டுப் பாட்டு நெறியாளர் மேஜர் ஜி.ரவிசெல்வம், துணை முதல்வர் டாக்டர் எம்.மதிவாணன், ஏவிசி பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி இயக்குநர்கள்,  முதல்வர்கள், மாண வர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.