districts

திருச்சி விரைவு செய்திகள்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

தஞ்சாவூர், ஜூலை 30-  தஞ்சாவூர் தமிழ்ப் பல்க லைக்கழகமும், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியும் புரிந் துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் முன்னி லையில், பதிவாளர் முனை வர் சி.தியாகராஜன், பிஷப்  ஹீபர் கல்லூரியின் முதல்வர்  முனைவர் த.பால்தயாபரன் ஆகியோர், 5 ஆண்டு களுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்ப மிட்டு ஒப்பந்தத்தை பரி மாறிக் கொண்டனர். சுற்றுச் சூழல் அறிவியல் தொடர் பான கல்வி, ஆராய்ச்சி  மற்றும் மேம்பாட்டுப் பணி கள், மாணவர்களுக்கான பணிப் பயிற்சி திட்டங்கள், வளாக சுற்றுச்சூழல் தணிக்கை பயிற்சிகள் போன்ற வற்றை இணைந்து மேற் கொள்வதற்காக புரிந்து ணர்வு ஒப்பந்தம் மேற்கொள் ளப்பட்டது. இந்நிகழ்வில் இரு கல்வி நிறுவனங்களின் துறைத் தலைவர்கள், ஆசிரி யர்கள் பங்கேற்றனர்.


போக்குவரத்து ஊழியர்கள்  வேலைநிறுத்த ஆயத்தப் போராட்டம்

நாகப்பட்டினம், ஜூலை 30 - நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் அரசு போக்கு வரத்து பணிமனை முன்பு வேலை நிறுத்த ஆயத்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மண்டல தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க வும், பொது போக்குவரத்தை பலப்படுத்தவும், தனியார்மய நடவடிக்கையை முறியடிக்கவும், ஊதிய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தவும், இன்சென்டிவ் பிரச்சனைக்கு தீர்வு காண வும், ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வு கால பலன்,  அகவிலைப்படி, உயர் மருத்துவ காப்பீடு பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு போக்கு வரத்து ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்தத்திற்கான ஆயத்த போராட்டத்தினை நடத்தினர். கோரிக்கைகளை விளக்கி மண்டல பொதுச் செயலா ளர் எஸ்.ராஜேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. தங்கமணி. மண்டல பொருளாளர் எஸ்.வைத்தியநாதன், நாகப்பட்டினம் பணிமனை தலைவர் பஞ்சநாதன் உள்ளிட் டோர் உரையாற்றினர். 


சிபிஎம் கையெழுத்து இயக்கம்

 தஞ்சாவூர், ஜூலை 30 -  தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து, ரயிலடி  வழியாக மருத்துவக் கல்லூரிக்கு நகரப் பேருந்துகளை உடனே இயக்கிடக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பாக  தஞ்சை பாலாஜி நகரில் ஏ.ஜெயபிரகாஷ் தலைமை யில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.  கையெழுத்து இயக்கத்தை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் துவக்கி வைத்தார். கட்சியின் மாநகரச் செயலாளர் எம்.வடி வேலன், மாநகரக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  ஆற்றுப் பாலம் கட்டுமானப் பணிகளுக்கு முன்பாக, பழைய பேருந்து நிலையத்தில் இருந்து, ரயிலடி, கான்வென்ட், ராமநாதன் மருத்துவமனை வழியாக, மருத்து வக் கல்லூரிக்கு, வழக்கமாகச் சென்று கொண்டிருந்த நகரப் பேருந்துகள் தற்போது அந்த வழியாகச் செல்லா மல், பெரியகோயில் மேம்பாலம் வழியாக செல்வதால், கான்வென்ட், ராமநாதன் மருத்துவமனை, ரோகிணி மருத்துவ மனை வழியாகச் செல்லும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.  எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொது மக்களிடம் கையெழுத்து பெற்று, ஆட்சியர், போக்கு வரத்துத் துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.


செல்லகோன் ஆற்றில்  இறந்து கிடக்கும் மீன்களால் கடும் துர்நாற்றம்: மக்கள் பாதிப்பு

வேதாரண்யம், ஜுலை 30 - நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மருதூர் வடக்கு கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத் தினர் வசித்து வருகின்றனர். மருதூர் வடக்கு செல்லகோன் ஆற்றில் மீன்கள் இறந்து கிடப்பதால், கடுமையான துர்நாற்றம்  வீசுகிறது. இதனால் கிராம மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் ஆற்றின் மறுபுறம் உள்ள தகட்டூர் வழியாக செல்லும் ஆற்றிலும் மீன்கள் இறந்துள்ளதால், கடும்  துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் இந்த ஆற்றுத் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தெரியாமல் இந்த தண்ணீரை பயன்படுத்திய மாணவிகளுக்கும், கிராம  மக்களுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அக்கிராம  மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே ஆற்றில் இறந்து கிடக்கும் மீன்களையும், வெங்காயத்தாமரைகளையும் அகற்ற வேண்டுமென கிராம  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மாணவிகளுக்கு பாராட்டு

அறந்தாங்கி,  ஜூலை 30 -  புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில்  இயங்கி வரும் ஆவணத்தாங் கோட்டை மேற்கு நடுநிலைப் பள்ளி யில் பள்ளி மேலாண்மை குழு  கூட்டம் மற்றும் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பாராட்டு விழா நடைபெற் றது.  நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ப.கலைச் செல்வி தலைமை வகித்தார். பட்டி மன்ற பேச்சாளர் தமிழ் செம்மல் கவி ஞர் ஜீவி முன்னிலை வகித்தார்.  நிகழ்வில் சிறப்பு விருந்தி னர்களாக அறந்தாங்கி ரோட்டரி கிளப் செயலாளர் விஜயேந்திரன், அறந்தாங்கி திஃபோர்ட் சிட்டியின்‌ தலைவர் விகாஸ்சரவணன், விடி யல் அறந்தாங்கி ரோட் டிராக்ட் கிளப்பின் தலைவர் பிரபுதேவா, கலந்து கொண்டனர். தேசிய திற னாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற  மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி பாராட்டப் பட்டது.


 

;