districts

திருச்சி விரைவு செய்திகள்

ஆசாரிபள்ளம் அருகே எண்ணெய் மில்லில் தீ விபத்து ரூ.40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

நாகர்கோவில், மார்ச் 8 ஆசாரிபள்ளம் அருகே வெள்ள மண் ஓடை பகுதியில் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான எண்ணெய் மில் உள்ளது. இங்கு வேம்பு, புங்கு, இலுப்பை, சில்க் காட்டன், மரவெட்டி, கருஞ்சுட்டி உள்பட பல எண்ணை வித்துக்கள் வியாபாரத்திற்கு அரைத்து வருகிறார்கள். இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணி  புரிந்து வருகிறார்கள்.இந்த ஆலையில் செவ்வாயன்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் அங்கிருந்த பொருட்கள் மற்றும் அரைத்து வைக்கப்பட்டு இருந்த எண்ணெய்மற்றும் புண்ணாக்கு அரைப்பதற்கு தேவையான மாட்டு எலும்பு தூள் உள்பட சுமார் 15 டன் பொருட்கள் தீயில் எரிந்து நாசம் ஆனது.  எண்ணெய் வித்துக்கள் வைத்திருந்த குடோனும் வெடித்து சிதறி சேதம் ஆகியது. தீ கொளுந்து விட்டு எரிவதை பார்த்து அக்கம் பக்கத்தினர் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில்ஈடு பட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீ அணைக்கப் பட்டது. இருப்பினும் அந்த பகுதி புகை மண்டலமாக இருந் தது. தீ விபத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான எண்ணெய் வித்துக்கள், எண்ணெய் புண்ணாக்குகள் எரிந்து நாசமாகி உள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து ஆசாரிப் பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கூட்டுமங்கலம் அருகே ண்ணீர் குட்டையில் விழுந்து வாலிபர் பலி

நாகர்கோவில், மார்ச் 8 மண்டைக்காடு அருகே கூட்டுமங்கலம் பகுதியில் தென்னை மட்டைகளிலிருந்து நார் பிரித்து எடுக்கும் மில்கள் உள்ளன. நார்களை பிரித்து எடுப்பதற்கு இந்த மில்களின் அருகில் மட்டைகளை ஊற வைக்கும் தாரைகள் (தண்ணீர் தேங்கிய பள்ளம்) உள்ளன. செவ்வாய்க்கிழமை மதியம் இங்குள்ள ஒரு தாரையில் சுமார் 40 வயது  மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் தலை குப்புற கவிழ்ந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊர் என்று தெரியவில்லை. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மணவாளக்குறிச்சி காவல் துறைக்கு  தகவல் தெரிவித்தனர். காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு கரை சேர்த்தனர். அவரது கழுத்தில் உத்திராட்சை கொட்டை மாலை அணியப்பட்டிருந்தது. பின்னர் பிரேத பரிசோதனைக்கு உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாரையில் தவறி விழுந்து பலியான வாலிபர் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் கொடை விழா தற்காலிக கடைக்கு வேலைக்கு வந்தவரா?அல்லது தனி யாக கோவிலுக்கு வந்த வெளியூர் பக்தரா? என தெரியவில்லை. இது குறித்து மண்டைக்காடு கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) குமாரி சிந்து மணவா ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் செந்தில் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகிறார். 


புளியங்குடியில்  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி,   மார்ச் 7  தென்காசியில் மாவட்ட அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் புளியங்குடி எஸ்.வீராச்சாமி செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி யில் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதில் தென்காசி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன.  இந்த  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் எழுதப்படிக்கத் தெரிந்தவர் முதல் முதுநிலை பட்டதாரி, பிஇ, டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்கள் உள்ளிட்டஅனை வரும்  கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், இத்துறை யின் கீழ் இயங்கிவரும் அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இம்முகாமில் கலந்துகொள்ள இருப்பதால் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் இந்நிறுவனத்தின் மூலம் பதிவு செய்து வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறலாம்.  நெரிசலை தவிர்க்க முன்பதிவு அவசியம் என்பதால் https;//tinyurl.com/tenkasi2023 என்ற google form-இல் தங்களது சுயவிபரங்களை பதிவு செய்த பின் தங்கள் மின்னஞ்சலுக்கு வழங்கப்படும் டோக்கன் எண்ணுடன் இம்முகாமில் கலந்து கொள்ளவும். தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளவிருக்கும் வேலைய ளிப்போர்கள் விபரம் அறிய https://www.decgcten kasi.com/mega-job-fair-2023 என்ற google link-ஐ பார்த்து பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துரை. இரவிசந்திரன் தெரிவித்துள்ளார்.


 

;