districts

திருச்சி முக்கிய செய்திகள்

டிச.29 மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்

அரியலூர், டிச.24 - அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள், சிறப்பு குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திற னாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் டிசம்பர் 29 அன்று காலை 11  மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியரக பொது மக்கள்  குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத் தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகள் மற்றும் மனுக்களு டன் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் முகம் மட்டும் தெரியும்படியான வண்ண புகைப்படம் ஆகிய வற்றுடன் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்கி பயனடையுமாறு  மாவட்ட ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

நாட்டு நலப்பணித்திட்ட தொடக்க விழா 

தஞ்சாவூர், டிச.24 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும்  நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்  தொடக்க விழா முடச்சிக்காடு செங்குண்டு பிள்ளையார் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.  கல்லூரி முதல்வர் நா.தனராஜன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் (அலகு-1)முனைவர் சி.ராணி வரவேற்றார். சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்து மாணிக்கம், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் கே. முத்துலட்சுமி காளிமுத்து, ஊராட்சி மன்றத் தலைவர் சீ.சக்கரவர்த்தி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் எம்.நீலகண்டன், முடச்சிக்காடு முஸ்லிம் ஜமாத் தலைவர் சேக் இப்றாம்ஷா ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். நாட்டு  நலப்பணித்திட்ட அலுவலர் (அலகு-2) முனைவர் நா.பழனிவேலு நன்றி கூறி னார்.  இம்முகாமில், பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குதல், சீமை கருவேல மரங்களை அகற்றுதல், சாலை துப்புரவு பணி, கோவில் உழவாரப் பணி, மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன. 

வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை,  ரூ.2 லட்சம் பணம் திருட்டு

தஞ்சாவூர், டிச. 24 - தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெருமாள் கோயில் தைலம்மை நகர்  பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீப்ரியா (46), தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து  வருகிறார். இவரது கணவர் பழனிவேல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்து  விட்டார்.  ஸ்ரீபிரியா பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உதவி  தலைமை ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வியாழக் கிழமை காலை 9 மணிக்கு பள்ளிக்கு வேலைக்கு சென்றுவிட்டு மாலை 5  மணிக்கு வீடு திரும்பியுள்ளார்.  அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்ப தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீபிரியா உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 40 பவுன் நகை, 2 லட்சம் ரொக்கப் பணம் மற்றும்  வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.  இதுகுறித்து ஆசிரியை ஸ்ரீப்ரியா பட்டுக்கோட்டை நகர காவல் துறைக்கு உடனடியாக தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த  பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக் கண்ணன் மற்றும் காவல்துறையினர் திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு கையேடுகள் வழங்கல்

அரியலூர், டிச.24 - அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் சார்பில் மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு கையேடுகளை மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட கல்வி அலுவலர் ஜான்பாக்கிய செல்வம், ராம்கோ சிமெண்ட் நிறுவன பொது மேலாளர் ராமரா ஜன், துணை மேலாளர்கள் ஜான்சன், மகேஷ், இணை இயக்குநர் (அரசு  தேர்வுகள் இயக்கம் சென்னை) செல்வகுமார், பள்ளித் துணை ஆய்வாளர்  பழனிசாமி மற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு குறைதீர் முகாம்

முசிறி, டிச. 24 - திருச்சி மாவட்டத்தில் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியி லும், தொட்டியம் வான்பட்டறையிலும் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்  நடைபெற்றது. இம்முகாமில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந.தியாகரா ஜன், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், லால்குடி சட்ட மன்ற தொகுதி எம்எல்ஏ சவுந்தரபாண்டியன், நகராட்சி ஆணையர் மகாதேவன்,  தாசில்தார் சண்முகப்பிரியா, கோட்டாட்சியர் மாதவன் உள்ளிட்ட அனைத்து  துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு அபராதம்

அரியலூர், டிச.24- அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் ஆலைகள் அதிக அளவில் உள்ள தால் ஆலைகளுக்கு இயங்கக் கூடிய கனரக வாகனங்களின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்களால் அடிக்கடி  விபத்துக்கள் நிகழ்கின்றன. அனைத்து வாகனங்களிலும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி யுள்ளது. இந்நிலையில் ரேடார் கருவி மூலம் வாகன வேகத்தை கண்டறிந்து அபராதம் விதிக்கும் நடவடிக்கையிலும் மாவட்ட காவல்துறை மற்றும் போக்கு வரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ரேடார் மூலம் செயல்படும் தானி யங்கி வேகமானி மூலம் குறிப்பிட்ட தூரத்தில் வரக்கூடிய வாகனங்களின் வேகத்தை கண்டறிந்து அபராதம் விதிக்க முடியும். அதிவேகத்தில் வாகனங்கள் வந்தால் எவ்வளவு வேகத்தில் வாக னங்கள் வருகிறது என்பது தானியங்கி வேகமானி திரையில் தெரியும். அப்போது குறிப்பிட்ட அளவு வேகத்தை விட அதிவேகமாக வரும் வாகனங் களுக்கான அபராத ரசீது வரும். அந்த ரசீதில், குறிப்பிட்ட சாலையில் செல்லக் கூடிய வேகம், அதிவேக அளவு, அதற்கான அபராத தொகை உள்ளிட்ட  விவரங்கள்  ரசீதில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனையடுத்து சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் மீது  வழக்கு பதிவு செய்து அபராத தொகை வசூல் செய்யப்படும். இவ்வகை யான தானியங்கி வேகமானி முறையில் அரியலூர் புறவழிச்சாலையில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மதன் தலைமையில் போக்குவ ரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேக மாக வந்த கார் உள்ளிட்ட வாகனங்களைக்கு அபராத தொகையாக 400 ரூபாய்  ஆன்-லைன் மூலம் வசூல் செய்யப்பட்டது.

மரங்களை பாதுகாக்க, அப்புறப்படுத்த முன் அனுமதி பெற அறிவுறுத்தல்

அரியலூர், டிச. 24- அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களிலும் உள்ள மரங்களை பாதுகாத்திடவும், அதனை அப்புறப் படுத்தவும் நேர்வுகளில் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சி யர்களின் முன் அனுமதி பெற வேண்டும் என அனைத்துத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் அறி வுரை வழங்கப்பட்டுள்ளது.  டிச.23 அன்று அரியலூர் மாவட்டம் மற்றும் வட்டம், அமீனா பாத் கிராமம், ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்திலுள்ள 2 பூவரசம், 1 வேப்பமரம், 2 வாத நார  மரம் ஆகிய 5 மரங்களை உரிய அனுமதியின்றி வெட்டிய  மேற்படி கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் மற்றும் சகுந்தலா  ஆகியோர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  மேலும், மரங்கள் வெட்டுவதை தடுக்கத் தவறிய அமீனா பாத் கிராம நிர்வாக அலுவலர், அரியலூர் வருவாய்  கோட்டாட்சியரால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள் ளார். மேலும், இதனைத் தடுக்கத் தவறிய சம்பந்தப்பட்ட அலு வலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  இதேபோன்று கடந்த மாதம் அரியலூர் வட்டம், காவனூர் கிராமத்தில் உரிய அனுமதியின்றி மரம் வெட்டியதை கண்கா ணிக்க தவறிய கிராம நிர்வாக அலுவலர் பணிநீக்கம் செய்யப் பட்டு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பி டத்தக்கது என மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி  தெரி வித்துள்ளார்.

108 ஆம்புலன்சில் பணிபுரிய டிச.29, 30 வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சாவூர், டிச.24 - ஜிவிகே ஈஎம்ஆர்ஐ நிறுவனம் சார்பாக 108 ஆம்புலன்சில் பணிபுரிய மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணி களுக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தஞ்சா வூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.  இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட் டத்தைச் சேர்ந்த உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம். இம்முறை மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் என இரண்டு  பணிகளுக்கும் ஒருவரே நியமிக்கப்பட உள்ளார்.  இதற்கு, பிஎஸ்சி வேதியியல், இயற் பியல், உயிரியல், பயோடெக்னாலஜி, தாவரவியல், விலங்கியல், மைக்ரோ பயாலஜி மற்றும் பிஎஸ்சி நர்சிங் அல்லது லேப் டெக்னீசியன் அல்லது பி.பார்ம்  அல்லது அரசு மருத்துவக் கல்லூரியில்  2 ஆண்டுகள் சான்றிதழ் படிப்பு படித்த  (ப்ளஸ் டூ முடித்து இரண்டு ஆண்டு கள்) ஆண், பெண் பங்கேற்கலாம்.  நேர்முகத்தேர்வு அன்று 22 வயதுக்கு  மேலும் 35 வயதுக்குள்ளும் இருக்க  வேண்டும். இந்த பணிக்கு மாத ஊதி யம் 14 ஆயிரத்து 966 ரூபாய் வழங்கப்ப டும். உயரம் 162.5 சென்டிமீட்டர் குறையா மல் இருக்க வேண்டும். புது வாகன ஓட்டும் உரிமம், பேட்ச் மற்றும் இலகு  ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று  மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க  வேண்டும்.

 12  மணி நேர ஷிப்டு முறையில்  தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களி லும் இரவு-பகல் ஷிப்டு முறையில் பணியமர்த்தப்படும். தகுதியின் அடிப்ப டையில் மட்டுமே ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி  வரை கீழே குறிப்பிட்டுள்ள முகவரி களில் நடைபெறும் தஞ்சாவூர்: இந்திய செஞ்சிலுவை சங்கம் வளாகம், மெடிக்கல் காலேஜ் ரோடு மேம்பாலம் அருகே, தஞ்சாவூர். திருவாரூர்: பழைய மருத்துவமனை வளாகம் தீயணைப்பு துறை அலுவல கம் அருகே கமலாலயம் ரோடு, திருவா ரூர். மயிலாடுதுறை (டிச.29 மட்டும்): ஏவிசி பொறியியல் கல்லூரி, மயிலாடு துறை. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மேற்கண்ட தகுதிகளை கொண்டவர்களாக இருப்பின் தங்களது அனைத்து அசல் சான்றுகளை மையங்களுக்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தகுதி யின் விவரங்கள் தெரிந்து கொள்ள காலை 9 மணி முதல் 16:30 வரை  7397701807 மற்றும் 9790847828 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து  கொள்ளலாம் என தஞ்சாவூர் சரக  108 ஆம்புலன்ஸ் சேவை அதிகாரி  மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.