தஞ்சாவூர், டிச.31 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினரும், நகர வர்த்தகர் சங்க துணைத் தலைவருமான தோழர் சுகி என்ற சு.கிருஷ்ணமூர்த்தி (71) கடந்த டிச.27 (திங்கள்கிழமை) அன்று காலமானார். அவருக்கு மனைவி தாரா, மகன் கப்பல் பொறியாளர் கி.ஜவஹர், மகள் மருத்துவர் பிரியதர்ஷினி ஆகியோர் உள்ளனர். அன்னா ரின் இறுதி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் கோ.நீலமேகம், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மனோகரன், எஸ்.தமிழ்ச்செல்வி, எம்.செல்வம் உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள், வர்த்தக சங்கத்தினர், உறவினர்கள் கலந்து கொண்டனர்.