districts

மதுரையில் நான்காவது ஆண்டாக திருநங்கையர்-திருநம்பிகள் குறும்படப் போட்டி

மதுரை, ஜூன் 6-

     மதுரையில் திருநங்கை யர்- திருநம்பிகள் குறும்பட போட்டிகளை நடத்த உள்ள தாக திருநங்கைகள் வள மைய அறங்காவலர்களில் ஒருவரான பிரியாபாபு திங்க ளன்று நமது செய்தியா ளரிடம் தெரிவித்தார்.

    திருநங்கையர்-திருநம்பி கள் குறும்பட போட்டிகளை கடந்த மூன்றாண்டுகளாக நடத்தி வருகிறோம். இது வரை தமிழ் மொழியில் மட்டுமே நடைபெற்றுவந்த குறும்படப் போட்டி நான்கா வது ஆண்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் நடத்தத் திட்ட மிட்டுள்ளோம்.

   தமிழக அரசு  நிறைய செய்திருந்தாலும், சமூ கத்தில் மெதுவான மாற்றம் நிகழ்ந்தாலும், இன்னும் சில கடமைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ளது. இந்தக் குறும்பட நிகழ்வு “சமூகம் திருநங்கை களைப் பார்க்கும் விதத்தில் மாற்றத்தைக் கொண்டுவர உதவும். இதற்கு ஊடகம் ஒரு வலுவான கருவி.  

    முதல் மூன்று ஆண்டுகள் நடத்தப்பட்ட போட்டிகளில், 60-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டது. இதில் பரிசு பெற்றவர்களில் சிலர் பிரபலமான திரைப்படங்க ளில் இயக்குநர்களாக மாறி யுள்ளனர். 2018-ஆம்ஆண்டு பரிசோதனை முயற்சியாக ஆரம்பித்த இந்தப் போட்டி நான்காவது ஆண்டில் தொடர்கிறது.  

   நான்காம் ஆண்டு குறும் படப்போட்டி ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெறு கிறது. இந்தக் குறும்படப் போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. சுமார் 450 திருநங்கைகள் பங்கேற் கின்றனர். மொத்தப்பரிசுத் தொகை ரூ. 2 லட்சம்என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 40 விருதுகள்வழங்கப்பட உள்ளது. 12 நடுவர்கள் பங்கேற்கின்றனர் என்றார்.

    மதுரை மன்னர் கல்லூரி மற்றும் மதுரையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மற்றும் திருச்சிராப் பள்ளியில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரி ஆகியவற்று டன் புரிந்துணர்வு ஒப்பந்தத் த்தில் கையெழுத்திட்டுள் ளனர்  இதன்மூலம் சமுதா யத்தில்மாற்றத்தை ஏற்படுத் தும் என நம்பிக்கை தெரிவிக் கின்றனர்.