புதுக்கோட்டை, ஆக.10 -
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கண்டியன் தெரு, மைலன்கோன்பட்டி ஆகிய இடங்களில் புதி மின்மாற்றிகளை கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மாலா, உதவி மின் பொறியாளர் ஆறுமுகம், திமுக ஒன்றியச் செயலாளர் முத்துகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் த.அன்பழகன், ஒன்றியச் செயலாளர் பி.வீரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.