districts

img

இன்று பொது வேலைநிறுத்தம் புதுகையில் தொழிற்சங்கத்தினர் பிரச்சாரம்

புதுக்கோட்டை, பிப்.15 -  ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து வெள்ளியன்று நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை விளக்கி,  புதுக்கோட்டையில் அனைத்துத் தொழிற் சங்கத்தினர் மற்றும் ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தெருமுனைப் பிரச்சாரக்  கூட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலை யப் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்துக்கு, தொமுச மாவட்டச் செயலர் கி.கணபதி, ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளர் மு.மாதவன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாநிலச் செய லாளர் ஏ.ஸ்ரீதர், ஏஐடியுசி மாவட்டப் பொதுச்  செயலாளர் ப.ஜீவானந்தம் உள்ளிட்டோர் பேசினர்.