நன்னிலம், மார்ச் 5 - நல்ல ஆசிரியருக்கான விருது தேர்வில் “சூரியனின் விடியல் 2022” பூந்தோட்டம் அரசினர் மேல்நிலைப் பள்ளி 10 வகுப்பு ஆசிரியர் கோ.ஹேமலதாவுக்கு மொழி செம்மல் விருது வழங்கப்பட் டது. அறம் அன்பின் அடையா ளம் என்ற அறக்கட்டளை சார்பாக தமிழகம் முழுவது மிருந்து நல்லாசிரியர், சமூக ஆர்வலர்கள் மற்றும் தனித் தகுதி, சிறப்பு மிக்கவர்கள் என ஆண்டுதோறும் தேர்வு செய்து விருது வழங்கி சிறப்பித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான விருது, திருவாரூர் மாவட்டம் நன்னி லம் ஒன்றியம், பூந்தோட்டம் அருகே உள்ள கூத்தனூர் கிராமத்தில், கடந்த 32 ஆண்டுகளாக கல்விப் பணி யில் தன்னை அர்ப்பணித் துள்ள பூந்தோட்டம் அரசி னர் மேல்நிலைப் பள்ளி ஆசி ரியர் கோ.ஹேமலதாவுக்கு ‘மொழி செம்மல் விருது’ அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டுள்ளது. விருதினை அறக் கட்டளையின் தலைவராக ரா.நவேதா, அறங்காவலர் சி.சாய் பிரசன்னா ஆகியோர் வழங்கி சிறப்பித்துள்ளனர். விருதுக்கான குழுவில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி உள்ளிட்டோர் உள்ள னர். இந்த ஆண்டுக்கான விருது தங்கள் பள்ளி ஆசிரிய ருக்கு கிடைத்துள்ள செய்தியை அறிந்த சக ஆசி ரியர்களும், மாணவர்களும் ஆசிரியர் ஹேமலதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.