districts

img

மன அழுத்தத்தைக் குறைக்க காவல்துறை அலுவலர்களுக்கு டிஜிபி அறிவுரை

தஞ்சாவூர், ஜூலை 9-

     தஞ்சாவூரில் காவல் துறை உயர் அலுவலர் களுடன் சனிக்கிழமை மாலை ஆலோசனை நடத்திய தமிழ்நாடு காவல் இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவால் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான அறி வுரைகளை வழங்கினார்.

    தமிழ்நாடு காவல் துறை  இயக்குநராகப் புதிதாகப்  பொறுப்பேற்ற சங்கர் ஜிவால் முதல் முறையாக  தஞ்சாவூருக்கு சனிக் கிழமை மாலை வந்தார். பின்னர், தஞ்சாவூர் சரகத் துக்கு உள்பட்ட மாவட்டக்  காவல் கண்காணிப்பா ளர்கள், துணைக் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்திய அவர்  பேசியதாவது:

    தஞ்சாவூர் சரகத்துக்கு உள்பட்ட காவலர்களுக்கு கடமைகள் எந்த அளவு முக்கியமோ, அதேபோல அவர்களுடைய குடும்பமும் முக்கியம். இதைக் கருத் தில் கொண்டு, காவல்  துறையினர் ஒவ்வொரு வரும் பணிகள் முடிந்த பிறகு தனது குடும்பத்தின் மகிழ்ச்சி யிலும் அக்கறை காட்ட  வேண்டும். அது உங்க ளுடைய மன அழுத்தத் தைக் குறைக்கச் செய்யும்.  மனைவி, குழந்தைகள் மற்றும் தாய், தந்தையரை அரவணைத்து அவர்களி டத்தில் மனம் விட்டு பேசி  மகிழ்ச்சியுடன் வாழ வேண் டும். காவல் துறையினர் துறைரீதியான தங்களு டைய குறைகளை, தயங்கா மல் என்னிடம் தெரியப் படுத்தலாம்” என்றார்.

     இக்கூட்டத்தில் மத்திய மண்டல காவல் தலைவர் கார்த்திகேயன், தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர்கள் ஆஷிஷ் ராவத் (தஞ்சாவூர்), சுரேஷ் குமார் (திருவாரூர்), ஹர்ஷ்  சிங் (நாகை), நிஷா (மயி லாடுதுறை) மற்றும் துணைக் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.