districts

img

இந்தியாவிலேயே மருத்துவப் படிப்பை தொடர ஒன்றிய- மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உக்ரைனிலிருந்து திரும்பிய தரங்கம்பாடி மாணவி கோரிக்கை

மயிலாடுதுறை, மார்ச் 9 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், கோவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த ஆர்த்திகா என்ற  மாணவி உக்ரைன் நாட்டில் மருத்து வம் படித்து வந்தார். உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடக்கும் நிலையில், ஒன்றிய-மாநில அரசுகள் தங்களை விரைவாக மீட்க நடவ டிக்கை எடுக்க செல்போன் மூலம்  பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.  இதையடுத்து, ஆர்த்திகாவின் பெற்றோர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். ஒன்றிய, மாநில அரசுகளின் முயற்சியில் ஆர்த்திகா இரண்டு நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை கோவாஞ்சேரியில் உள்ள அவரது  வீட்டிற்கு பாதுகாப்பாக வந்தடைந் தார். பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், முன்னாள் எம்எல்ஏ அருட்செல்வன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.  இந்நிலையில் போர் நடைபெறும் சூழலில் இந்தியா வந்தடைந்தது குறித்து மாணவி ஆர்த்திகா கூறுகை யில், கார்கியுவில் இருந்து போலந்து  பார்டருக்கு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டோம். போக்குவரத்து வசதி இல்லாததால் மாண வர்கள் அனைவரும் ஒன்றிணைந்து  தங்களிடம் இருந்த பணத்தை கொண்டு தனியார் வாகனத்தில் சென்றாலும் எல்லைவரை இந்தி யர்களை அவர்கள் கொண்டு விட வில்லை. பல கி.மீ, தூரத்திற்கு முன்பாக இறக்கி விட்டுவிட்டனர்.

இரவு நேரத்தில் செல்போன் வெளிச்சத்தில் பல கி.மீ மைனஸ் 2 டிகிரி குளிரில் நடந்து சென்றோம். உக்ரைனை விட்டு போலந்து எல்லைக்கு சென்றபிறகு எந்த பிரச்ச னையும் இல்லை. இந்திய தூதரகத் தில் நன்றாக கவனித்துக் கொண்ட னர். உக்ரைன் எல்லையை கடப்பது  மிகவும் சிரமாக உள்ளது. அதற்கு ஏதா வது உதவி செய்தால் இந்தியர்கள் வெளியேறுவதற்கு வசதியாக இருக் கும். என்னுடன் நூறு மாணவர்கள் வந்தனர். விமானம் மூலம் தில்லி வந்து தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப் பட்டோம். அங்கேயும் தமிழக அரசு நன்றாக கவனித்து கொண்டது. மாநில அரசுகளின் முயற்சியால் நல்ல  முறையில் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். என்னைபோன்று இன்னும் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை விரைவாக மீட்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவம் இறுதி யாண்டு படிக்கிறேன். இந்தியாவி லேயே எனது படிப்பை தொடர்வதற்கு  ஒன்றிய-மாநில அரசுகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

ஆட்சியருக்கு நன்றி
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா-வை  நேரில் சந்தித்து முதலமைச்சர், மாவட்ட ஆட்சியருக்கு தனது குடும்பத் தினருடன் நன்றி தெரிவித்தார்.

;