districts

img

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க உழைக்கும் பெண்கள் வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 15- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்பு குழு சார்பில் சர்வதேச மகளிர்  தின விழா கருத்தரங்கம் திங்களன்று ஸ்ரீரங்கத்தில்  நடைபெற்றது. கருத்தரங்கி ற்கு உழைக்கும் பெண்கள் கன்வீனர் செல்வி தலைமை வகித்தார். கருத்தரங் கில்  35- ஆவது வார்டு (மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி) மாமன்ற உறுப்பினர் சுரேஷ் வாழ்த்துரை வழங்கினார்.  மாதர் சங்க மாவட்டத் தலைவர் ரேணுகா, மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, கட்டுமான சங்க மாவட்டத் துணைத் தலைவர் கல்யாணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.  கருத்தரங்கில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமைகளை தடுக்க போக்சோ சட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணி இடங்களில் வர்மா கமிஷன் அடிப்ப டையில் புகார் கமிட்டி அமைக்க வேண்டும். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் நஜ்முனிஷா நன்றி கூறினார்.

;