districts

img

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க மாநிலம் முழுவதும் தனி பிரிவு அமைக்க வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருச்சி மாவட்ட மாநாடு கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, செப்.18 - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருச்சி மாவட்ட 4-வது மாநாடு ஞாயிறன்று சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.  மாநாட்டுக்கு மாவட்ட பொருளா ளர் ஜோன்ஸ், மாவட்ட துணை செய லாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் இளங்குமரன் வரவேற்றார்.  முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி துவக்க  உரையாற்றினார். வேலை அறிக்கையை  மாவட்ட துணை செயலாளர் லெனின் வாசித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, அம்பேத்கர் சட்டப்பணிகள் சங்க ரத்தினம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில் திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையம் முன்பு உள்ள பெரியார் சிலையை, ஒருபுறத்தில் மறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறையின் கண்ட்ரோல் ரூம்  அகற்றப்பட வேண்டும். சாதி மறுப்பு  திருமணம் செய்தவர்களை பாது காக்கும் வகையில், தனி பிரிவு அமைப் பதற்கு உயர்நீதிமன்றம் வழிகாட்டு கிறது. ஆனால் இன்று வரை அமைக் கப்படவில்லை. எனவே மாநிலம் முழு வதும் அதனை அமைத்து அரசு விளம் பரப்படுத்த வேண்டும். சாதி பெயரில் உள்ள தெருக்களின் பெயர்களை மாற்ற  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய தலைவராக கோ. கனல்கண்ணன், செயலாளராக கோவி. வெற்றிச்செல்வம், பொருளாளராக எல்.ஜோன்ஸ் உள்பட 19 பேர் கொண்ட  புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட் டது. துணைப் பொதுச் செயலாளர் மகேந்திரன் நிறைவுரையாற்றினார். தலைவர் கனல்கண்ணன் நன்றி கூறி னார்.

;