districts

திருச்சி முக்கிய செய்திகள்

நூலக வாசகர் வட்டக் கூட்டம் 

தஞ்சாவூர்,  ஜூலை 2-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி கிளை நூலகத்தில், வாசகர் வட்டக் கூட்டம், வாசகர் வட்டத் தலைவர் தே. ஸ்டீபன்ராஜ் தலைமை யில் நடைபெற்றது. நூலகர் ஸ்ரீ வெங்கட்ரமணி வரவேற்றார். இந்நி கழ்ச்சியில் சமூக ஆர்வ லர் பிரபாகரன், மூன்றாம் நிலை நூலகர் சித்ரா, நூலகப் பணியாளர் பாண்டீஸ்வரி மற்றும் போட்டித் தேர்வாளர்கள், வாசகர்கள், உறுப்பி னர்கள் கலந்து கொண்ட னர். இதில் நவீன்குமார் ரூ.1000 செலுத்தி தன்னை புரவலராக இணைத்துக் கொண்டார். 

கிராம சபை கூட்டம்

பாபநாசம்,  ஜூலை 2 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி, ரெகுநாதபுரம், கோவிந்த நாட்டுச்சேரி, உள்ளிக்கடை, அம்மாப் பேட்டை ஒன்றியம் கொத்தங்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடை பெற்றது.  ரெகுநாதபுரத்தில் ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர், ராஜகிரி யில் தலைவி சமீமா பர்வீன், கோவிந்த நாட்டுச் சேரியில் தலைவர் ஜெய் சங்கர், உள்ளிக் கடை யில் தலைவி (பொ) சவுதா ராணி, கொத்தங் குடியில் தலைவர் பழனி தலைமை வசித்தனர். இதில் கலைஞர் கனவு இல்லத்திற்கான பயனா ளிகள் தேர்வாகினர். உறுப்பினர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.

ஜூலை 10 -இல் மக்கள் தொடர்பு முகாம் இன்று முதல்  மனு அளிக்கலாம்

புதுக்கோட்டை, ஜூலை 2 - புதுக்கோட்டை மாவட் டம் இலுப்பூர் வட்டம் சித்தனவாசல் சரகம், பனம்பட்டி வருவாய் கிரா மத்தில் ஜூலை 10 (புதன் கிழமை) அன்று காலை 10  மணியளவில் புதுக் கோட்டை மாவட்ட ஆட்சி யர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடை பெறவுள்ளது. இதனை யொட்டி, ஜூலை 3  அன்று முதல் பொது மக்களிடமிருந்து முன் மனுக்கள் சித்தனவாசல் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பெறப் பட உள்ளதால், பொது மக்கள் தங்கள் கோரிக்கை  தொடர்பான மனுக் களை அளித்து பயனடை யுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பேரூராட்சி மன்றக் கூட்டம்

பாபநாசம்,  ஜூலை 2 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பேரூ ராட்சி மன்றக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் பூங்குழலி தலைமை வகித்தார்.  செயல் அலுவலர் ரவி ஷங்கர், துணைத் தலை வர் பூபதி ராஜா  முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.  பேரூராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்வது, பாதாள  சாக்கடைத் திட்டம் நிறை வேற தமிழக அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜூலை 2 - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தி னர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கலைஞரின் கனவு இல்லத் திட்டம் மற்றும் ஊரக வீடுகள்  பழுது நீக்கும் திட்டங்களுக்கு போதுமான ஊழியர் கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கலைஞர் கனவு  இல்லத் திட்ட பயனாளர்கள் தேர்வு குறித்தான திருத்தப்பட்ட  வழிகாட்டு நெறிமுறைகளை உடனே வெளியிட வேண்டும்.  கலைஞர் கனவு இல்லத் திட்ட பயனாளர்கள் பட்டியல் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்ட பயனாளர்கள் பட்டியலை இறுதிப்படுத்த உரிய கால அவகாசம் அளிக்க  வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் நல்லமுத்து தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சௌந்திர பாண்டியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் து.இளவரசன், மாவட்டச் செயலாளர் ஆதி.ஜெயரா மன், மாநில செயற்குழு உறுப்பினர் பொன்.ராஜேந்திரன், மாவட்டத் துணைத் தலைவர் வெங்கடகிருஷ்ணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.

கட்சிக்குடா-மதுரை வாராந்திர விரைவு ரயில் புதிய கால அட்டவணைப்படி இயங்கும்

பாபநாசம், ஜூலை 2 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலர் சரவணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், கட்சிக்குடா - மதுரை - கட்சிக்குடா வாராந்திர விரைவு ரயில் (7191/7192) ஜூலை 2 முதல் புதிய கால அட்டவணைப்படி இயங்கும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணிக்கு மதுரைக்கும், ஒவ்வொரு புதன்கிழமை மாலை 3 மணிக்கு கட்சிக்குடா பகுதிக்கும் செல்லும்.  மதுரையில் இருந்து ஒவ்வொரு புதன்கிழமை காலை 10:40 மணிக்கு புறப்பட்டு மறுநாள்  வியாழன் இரவு 11 மணிக்கு கட்சிக்குடா சென்று சேரும். மதுரைக்கு பிரதி செவ்வாய் இரவு 7:30 மணிக்கும், கட்சிக்குடா பகுதிக்கு பிரதி புதன்கிழமை மாலை 3 மணிக்கும் செல்லும். எனவே ஒவ்வொரு புதன்கிழமை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, பாகலா (திருப்பதி) செல்லும் பயணிகள் இந்த வண்டியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்” கூறப்பட்டுள்ளது.

பெரியார் பல்கலை. துணைவேந்தர் பதவி நீட்டிப்புக்கு கண்டனம்

பாபநாசம், ஜூலை 2 - பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பணி நீட்டிப்பு செய்யப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ-வுமான எம்.எச். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்நாதன் பதவிக் காலம் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவுற்ற நிலையில், அவரை ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து, ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  துணைவேந்தர் ஜெகன்நாதன் மீது ஊழல் குற்றச்சாட்டு, விதிமீறல் என அடுக்கடுக்காக பல்வேறு சர்ச்சைகள் உள்ளன. பல சர்ச்சைகளில் சிக்கிய ஒருவரை மீண்டும் பதவி நீட்டிப்பு செய்திருப்பது ஏற்புடையது அல்ல. தனது பொறுப்பை உணராமல் போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதாக இவர் மீது கடும் குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்த வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.  பல்கலைக்கழகத்தின் தொழிலாளர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து துணைவேந்தருக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறைக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் ஆளுநர் ரவி செய்து கொண்டிருக்கிறார். இந்த கல்வியாண்டிற்கான மாணவர்களின் வருகை தொடங்க இருக்கும் நேரத்தில், இது போன்ற அறிவிப்பு வெளியாகி இருப்பது வேதனை அளிக்கிறது.  ஊழல்வாதிக்குத் துணைபோகும் ஆளுநரைக் கடுமையாக கண்டிக்கிறோம். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

சீனிவாசபுரம் கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

அரியலூர், ஜூலை 2 - அரியலூரை அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தில் கால்நடை பரா மரிப்புத் துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் இலவச கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் செவ்வாயன்று நடைபெற்றது. முகாமை ஊராட்சித் தலைவர் கலைச்செல்வி நெடுஞ்செழியன் தொடக்கி வைத்தார். அரியலூர் கால்நடை பராமரிப்புத் துறை கோட்ட  உதவி இயக்குநர் முருகேசன் முன்னிலை வகித்தார்.  கடுகூர் கால்நடை  மருந்தக கால்நடை உதவி மருத்துவர் குமார் தலைமையிலான மருத்து வக் குழுவினர், நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர். முன்னதாக, 4 முதல் 6 மாத வயதுடைய இரண்டு கிடேரி கன்றுகள் உள்ளிட்ட 9 மாடுகளுக்கு புதிதாக அடையாள காது வில்லைகள் அணி விக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஊராட்சி மன்ற துணைத் தலை வர் கலைச்செல்வி ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

லயன்ஸ் சங்க புதிய  நிர்வாகிகள் பணியேற்பு

தஞ்சாவூர், ஜூலை 2-  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர்  லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா ஞாயிறன்று நடை பெற்றது.  விழாவிற்கு ஏ.எஸ்.ஏ. தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். 2024 - 25 ஆம் ஆண்டிற்கு தலைவராக நா.ப.ரமேஷ், நிர்வாக செயலாள ராக க.குமார், சேவை திட்டச் செயலாளராக என்.ரவி, பொருளாளராக ஆவி.ரவி ஆகியோரை முன்னாள் ஆளுநர் எச்.சேக்தாவூது பணியில்  அமர்த்தி பேசினார். மாவட்டத் தலைவர் டி.ஸ்டாலின் புதிய உறுப்பினர் களை சங்கத்தில் இணைத்து வைத்துப் பேசினார். மாவட்டத் தலைவர்  (நிர்வாகம்) ஜாய்செந்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான சேவைத் திட்டங் களை வழங்கினார்.

 

;