districts

img

குமரி மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின

நாகர்கோவில், ஜன.16- குமரி மாவட்டத்தில் தளர்வு கள் இல்லாத முழு ஊரடங்கை யடுத்து ஞாயிறன்று பேருந்துகள் ஓடவில்லை, கடைகள் அடைக் கப்பட்டிருந்தன. சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள், ஆவின் பால் விற் பனை நிலையங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. நாகர் கோவில் நகரில் செட்டிகுளம் சந் திப்பு, வடசேரி சந்திப்பு, சவேரி யார் கோவில் சந்திப்பு, பார்வதி புரம், ஆட்சியர் அலுவலகம் பகுதி களில் சாலைகளில் தடுப்பு வேலி கள் அமைத்து இருசக்கர வாக னங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் எச்ச ரித்து அனுப்பினார்கள். மார்த்தாண்டம், குளச்சல், தக்கலை, அருமனை, இரணி யல், அஞ்சுகிராமம், ஆரல்வாய் மொழி உட்பட அனைத்து பகுதி களிலும் ஞாயிறன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சாலை கள் வெறிச்சோடி காணப்பட்டது. களியக்காவிளை, அஞ்சு கிராமம், ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடிகளில் காவல்துறையி னர் தீவிர சோதனை மேற்கொண் டனர். வாகனங்களை தடுத்து நிறுத்தி விசாரித்து மருத்துவ மனைகளுக்கு செல்பவர் களுக்கு மட்டும் அனுமதி அளித்த னர். மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பத்ரி நாராயணன் உத்தர வின் பேரில் மாவட்டம் முழு வதும் 55 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். தளர்வுகள் இல்லாத முழு ஊர டங்கு காரணமாக பொதுமக்கள்  அனைவரும் வீட்டிலேயே முடங்கினார்கள். காணும் பொங்கலையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் வழக்கமாக புதுமணத் தம்பதியினர் ,பொது மக்கள் ஏராளமானோர் குவிவது வழக்கம். ஞாயிறன்று முழு ஊர டங்கு என்பதால் சுற்றுலா தலங் கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா தலங்களில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

;