districts

நரிக்குறவர் இன மக்களுக்கு மனைப் பட்டா வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

தஞ்சாவூர், அக்.4 -  ஏரிப்புறக்கரை கிராமத்தில் வசிக்கும் விளிம்பு நிலை நரிக்குறவர் இன மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். அவர்களுக்கு அரசு  வீடு கட்டித் தர வேண்டும் என வலியு றுத்தி, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரையில், கிழக்கு கடற்கரை சாலையில், ரயில்வே தண்டவாளத்திற்கு அருகே 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன  மக்கள் குடிசை அமைத்து தங்கியுள்ள னர். இந்த மக்கள் வசிக்கும் பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை.  குறிப்பாக சாலை, மின் இணைப்பு, குடிநீர் வசதி இல்லாமல் இவர்கள் அவ திப்பட்டு வந்தனர்.  மேலும், அப்பகுதியில் தண்ணீர் தேங்கி நின்று நோய்த்தொற்றை உருவாகி, இவர்களது குழந்தை களுக்கு தோல்நோய் பாதிப்பு ஏற்பட்டது.  இதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பு, நரிக்குறவர் இன மக்க ளுக்கு குடிமனைப் பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, போராடி யது.  இதையடுத்து ஏரிப்புறக்கரை பகுதியில் வேறொரு இடத்தில் பட்டா வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், அந்த இடம் அரசுக்குச் சொந்தமானது, அங்கு  திடக்கழிவுத் திட்ட, வளம் மீட்பு பூங்கா  அமைக்கப்பட உள்ளது என ஊராட்சி  நிர்வாகத்தினர், அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அரசு அதிகாரி கள் அடையாளம் காட்டிய இடத்தில்  குடிசை அமைக்க சென்ற நரிக்குறவர் இன மக்களை ஊராட்சி நிர்வாகத்தினர் அனுமதிக்க மறுத்தனர்.

இந்நிலையில், நரிக்குறவர் இன மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பட்டுக்கோட்டை ஒன்றியச் செய லாளர் எஸ்.கந்தசாமி, சிஐடியு மாவட்டப்  பொருளாளர் பி.என்.பேர்நீதி ஆழ் வார், ஒன்றியக்குழு உறுப்பினர் ரெ.ஞானசூரியன் தலைமையில், பட்டுக் கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலியை சந்தித்து, மனைப் பட்டா, அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மனு அளித்தனர். விளிம்பு நிலை மக்கள் படும் சிரமங்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு நிர்வாகிகள் எடுத்துக் கூறியதை கேட்டறிந்த வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி, உடன டியாக பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ராமச்சந்திரனுக்கு அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, நரிக்குறவர் இன மக்களுக்கு மனைப் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தர விட்டார்.  மேலும் நகராட்சி ஆணையருடன் பேசி, அப்பகுதி மக்களுக்கு இரண்டு தெரு மின் விளக்குகளை உடனடியாக அமைத்துக் கொடுக்கவும், குடிநீர் குழாய் அமைத்துக் கொடுக்கவும் உத்தரவிட்டார். மருத்துவ அலுவலர் களுடன் பேசி, அப்பகுதியில் ஓரிரு  தினங்களுக்குள் மருத்துவ முகாம் அமைத்து, அப்பகுதி மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற் கொள்ள அறிவுறுத்தினார். உடனடியாக நடவடிக்கை எடுக்க  உத்தரவிட்ட வருவாய் கோட்டாட்சிய ருக்கு சிபிஎம் நிர்வாகிகள் நன்றி தெரி வித்தனர்.