districts

img

சாலைகளைத் தோண்டி கொடிக்கம்பம் நட்ட பாஜகவினர்

தஞ்சாவூர், நவ.27-  தஞ்சாவூர் மாவட்டத்தில், ‘‘என் மண் என் மக்கள்” என்ற பெயரில், பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வரு கிறார். இந்நிலையில் நவ.28 (செவ்வாய்க்கிழமை) மாலை 4  மணியளவில், தஞ்சாவூர் மாவட்டம்  பேராவூரணியில் நீதிமன்றம் அருகில் இருந்து நடைபயணமாக, பேராவூரணி நீலகண்டப் பிள்ளை யார் ஆலயம் வரை சென்று, பின்னர்  அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.  100 அடி கட் அவுட் இதையொட்டி பேராவூரணி நகர் முழுவதும் அனுமதி இல்லா மல் நூற்றுக்கணக்கான விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் சென்டர் மீடியன் நடுவே நூற்றுக்கணக்கான பாஜக கொடி கள் இரும்பு கம்பிகளில் ஊன்றி  நடப்பட்டுள்ளது. அதல்லாமல், பிர தமர் மோடி, பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரின் 100 அடி உயர கட் அவுட்டுகள் இரண்டு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.  மேலும், பேருந்து நிலையம் அருகே சாலையைத் தோண்டி 5 அடிக்கு ஒன்று என்ற வகையில்,  60 அடி உயரத்தில் கனமான இரும்புக் கம்பியால் ஆன நூற்றுக் கணக்கான கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. மழைக் கால மாக இருப்பதால், இரும்பு கம்பி கள் சாய்ந்தாலோ மின் கசிவு ஏற்பட்டாலோ உயிர் சேதம் ஏற்படும்  அபாயம் உள்ளது. 10-க்கும் மேற்பட்ட பிரச்சார வாகனங்களில் அண்ணாமலை வருகை குறித்து விளம்பரம் செய்யப்படுகிறது. 

நீதிமன்றத் தடையிருந்தும்

ஆனால் இவை எவற்றிற்கும் அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரி யவில்லை. சாலைகளில் இரும்பு  கம்பிகளை ஊன்றவும், விளம்பர தட்டிகளை வைக்கவும், நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலை யில், விருப்ப ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான அண்ணா மலை பங்கேற்கும் கூட்டத்தில், இது போல் எண்ணிலடங்கா விளம்பரத் தட்டிகளும், கம்பங்களும் வைக்கப் பட்டுள்ளது பொது மக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது.  கூட்டத்திற்கு கூட்டம் சட்டத் தைப் பற்றி பேசும் அண்ணா மலை, தனது கட்சியினர் சட்டத்தை  மீறி சாலையில் குழி தோண்டி இருப்பதை பற்றியும், நூற்றுக் கணக்கில் அனுமதி இல்லாமல் விளம்பர தட்டி, கொடிகள் ஊன்றி யிருப்பதை பற்றியும், இன்று சொந்தக் கட்சியினரை கண்டித்து பேசுவாரா என மக்கள் எதிர் பார்க்கின்றனர்.  மேலும், அண்ணாமலை வரு கையை ஒட்டி முக்கிய பிரமுகர்களி டம் கட்டாய பண வசூல் செய்யப் படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் பேராவூரணி புதுரோடு பகுதியைச் சேர்ந்த பேரூ ராட்சி கவுன்சிலர் மகாலட்சுமியின் கணவர் சதீஷ்குமார் என்பவர், காவல் நிலையத்தில் பாஜகவின ரின் அத்துமீறல் குறித்து புகார்  அளித்துள்ளார். அதில், “ஞாயிற்றுக் கிழமை பேராவூரணி வாரச்சந்தை நடைபெறும் போது, பொதுமக்கள்,  வியாபாரிகள் செல்லும் வாயிலை வழிமறித்து, சாலையில் குழி தோண்டி மக்கள் செல்ல முடியாத  அளவிற்கு, சட்டத்திற்கு புறம்பாக  விளம்பர தட்டிகளை வைத்துள்ள னர்.  இதேபோல் பேராவூரணி நகர் முழுவதும் உள்ள விளம்பர தட்டி களும், கொடிகளும் பொது மக்க ளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகை யில் இடையூறாக வைக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.