districts

img

பொறையர் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும்

மயிலாடுதுறை, ஆக. 8-  மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரிஸ் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான, சங்கத்தின் தரங்கம்பாடி ஒன்றிய 5 ஆவது மாநாடு ஒன்றிய தலைவர் ஜி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.  ஒன்றிய துணை தலைவர் ஜி.லெட்சுமி வரவேற்றார். சங்கத்தின் கொடியை மாவட்டத் தலைவர் டி.கணேசன் ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கி  உரையாற்றினார். மாநாட்டில், மறைந்த சங்க உறுப்பினர்களுக்கு அஞ்சலி தீர்மானத்தை ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.பாஸ்கரன், வேலை அறிக்கையை ஒன்றியச் செயலாளர் டி.கோவிந்தசாமி, வரவு -செலவு அறிக்கையை ஒன்றிய பொருளாளர் டி. தங்கையன் முன்வைத்தனர்.  மாநாட்டை வாழ்த்தி வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் ரஷியா, மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் ஷண்முகவள்ளி ஆகியோர் உரையாற்றினர்.  மாதாந்திர உதவி தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்திட வேண்டும். மயிலாடுதுறை  முதல் தரங்கம்பாடி வரையிலான ரயில் சேவையை மீண்டும் துவங்க வேண்டும். பொறையார் அரசு மருத்துவமனையில் மாதம் ஒருமுறை மருத்துவ முகாம் நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாநாட்டில், 15 பேர் கொண்ட புதிய ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டு ஒன்றியத் தலைவராக ஜி.செல்வராஜ், செயலாளராக டி.கோவிந்தசாமி, பொருளாளராக ஜி.ஆனந்தராஜ், துணைத் தலைவராக செல்வம், துணைச் செயலாளராக மோகனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  மாவட்டச் செயலாளர் புருஷோத்தமன் நிறைவுரையாற்றினார். புதிய ஒன்றியச் செயலாளர் நன்றி கூறினார்.