districts

திருச்சி முக்கிய செய்திகள்

தரங்கம்பாடி-மயிலாடுதுறை ரயில் போக்குவரத்தை துவக்கிடுக இன்று முதல் வாலிபர் சங்கம் மாபெரும் சைக்கிள் பேரணி            

 மயிலாடுதுறை, டிச,-07.  தரங்கம்பாடி-மயிலாடுதுறை ரயில் போக்குவரத்தை துவக்கிடக் கோரி இன்று முதல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெறுகிறது.                                         ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வர்த்தகத்தை பெருக்கும் நோக்கில் 1926 ஆம் ஆண்டு  தரங்கம்பாடி-மயிலாடுதுறை இடையே துவங்கப்பட்ட ரயில் போக்கு வரத்து 1986 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. பொதுமக்களின் முக்கிய போக்குவரத்தாகவும் , விவசாயிகள் உற்பத்தி செய்த விளைப்பொருட்களை சந்தைப்படுத்தவும் பெரிதும் உதவிய ரயில் போக்குவரத்தை மீண்டும் இயக்கி காரைக்கால் வரை சேவையை நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்  டிசம்பர்-08,9,10 மூன்று தினங்கள் மாவட்டம் முழுவதும் சைக்கிள் பிரச்சார பயணம் நடைபெறவுள்ளது.  சிபிஎம் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி குத்தாலம் கடைவீதியில் பயணத்தை துவக்கி வைக்கிறார். குத்தாலம் பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அறிவழகன், மாவட்ட தலைவர் ஐயப்பன், ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். 

ஜெயங்கொண்டம் வளர்ச்சிப் பணிகள்: எம்எல்ஏக்கள் ஆய்வு

அரியலூர், டிச.7- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்  ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் , அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா  ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.  பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர். இதில் ஒன்றியக்குழு தலைவர் ரவிசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஸ்தூரி (வட்டார ஊராட்சி), செந்தில்குமார் (கிராம ஊராட்சி),  ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

கும்பகோணம் அனைத்து தபால் நிலையங்களில்
மாதம் முழுவதும் ஆதார் முகாம்

கும்பகோணம், டிச.7-  கும்பகோணம் தபால் கோட்ட கண்காணிப்பாளர் கும்பசுவாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கும்பகோணம் தபால் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் கடந்த 1 ஆம்தேதி முதல் வருகிற 31 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை சிறப்பு ஆதார் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் புதிய ஆதார் அட்டை,பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட ஆதார் சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.  ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை தோறும் ஆதார் முகாம் நடந்து வரும் நிலையில் தற்போது மாதம் முழுவதும் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த சேவையை பயன்படுத்தி பொதுமக்கள் புதிய ஆதார், பெயர் திருத்தம் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குடிபோதையில் காவலரை தாக்கிய இராணுவ வீரர் கைது

அரியலூர், டிச.7 - அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள கச்சி பெருமாள் கிராமத்தைச் சேர்ந்தவர் இராணுவ வீரர் (அவில்தார்) கலையரசன். இவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் குடிபோதையில் அவரது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவரது மனைவி இராணுவ வீரரை வீட்டில் வைத்து பூட்டி, தனது தாயிடம் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் அழைத்து போகும்படி கூறி உள்ளார். இந்நிலையில் இராணுவ‌ வீரர் காவல்துறையினரிடம் தன்னை வீட்டு சிறையில் அடைத்துள்ளதாகவும் விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உடையார்பாளையம் காவல்துறையினர் கலையரசனை விடுவித்தனர்..  அப்பொழுது சம்பவ இடத்தில் இருந்த மைத்துனரை ராணுவவீரர் கலையரசன் தாக்கினார்.  இதனை தடுத்த காவல்துறையினரை ராணுவ‌ வீரர் தாக்கினார்  இது குறித்து வழக்கு பதிந்த உடையார்பாளையம் காவல்துறையினர் இராணுவ வீரர் கலையரசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி குட்செட்டில் அடிப்படை  வசதிகள் செய்து தருக: சிஐடியு கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, டிச,7-, திருச்சி குட்செட் சுமைப்பணி தொழி லாளர்கள் சங்க (சிஐடியூ) 27வது ஆண்டு பேரவை வியாழனன்று  வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் சேகர் தலைமை வகித்தார். சிஐடியு மாநர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார். சங்க செயலாளர் வெள்ளைச்சாமி சிறப்பு ரையாற்றினார். கூட்டத்தில் திருச்சி ரயில்வே குட்செட்டில் சுமார் 300 சுமைப்பணித் தொழிலாளர்கள்  இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர்.டெல்டா மாவட்டங்களுக்கு உரம், பூச்சி மருந்து. கோதுமை உட்பட உணவு பொருட்களை அனுப்பி வைக்கிறார்கள். இவர்கள் வேலைக்காக இரவு பகலாக இங்கேயே தங்க வேண்டி உள்ளது. எனவே இவர்களுக்கு ஓய்வறை, கேண்டீன், கழிப்பிட வசதி உட்பட அடிப்படை வசதி களை ரயில்வே நிர்வாகம் செய்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  தலைவராக வி.கே. சேகர், செயலாளராக பி. வீரபாண்டியன், பொருளாளராக அசோக்குமார் உள்பட 11 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது. சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் சிவகுமார் நிறைவுரை யாற்றினார்.  பொருளாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

மோசடி செய்த பணத்தில் சொத்துக்களை வாங்கிக் குவித்த  ஆம்னி பேருந்து நிறுவன உரிமையாளரின் நண்பர் கைது

தஞ்சாவூர், டிச.7–    தஞ்சாவூரில், ஆம்னி பேருந்து நிறு வனம் மூலம் மோசடி செய்தவரின், நண்பரை பொருளாதார குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். இதில், முதலீடு செய்தால், அதிகளவில் லாபம் பங்கு தருவ தாகக்கூறி, பலரிடம், சுமார் ரூ.1 லட்சம் முதல்10 லட்சம் வரை கமாலுதீன் வசூல் செய்து, மாதம் ரூ. 3 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பங்கு தொகையை வழங்கினார்.   பின்னர், சில மாதங்கள் வழங்கிய நிலை யில், பங்கு தொகையை வழங்காமல் மோசடி செய்து விட்டு, பங்குதாரர்கள் பணத்தில் கோடிக்கணக்கான சொத்துக் களை வாங்கி குவித்தார். ஆனால், கடந்த 2021 ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி கமாலுதீன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இதையடுத்து பங்குதாரர்கள், ராஹத் நிறுவனத்தின் சொத்து வாரிசுகளான கமாலுதீனின் மனைவி ரேஹானா பேகம், அவரது மகன்களான அப்சல் ரஹ்மான், ஹாரீஸ் ஆகியோரிடம், பணத்தை கேட்ட னர். ஆனால், அவர்கள் தர மறுத்து விட்டனர். இது குறித்து காவல்துறைக்கு பல்வேறு புகார்கள்  வந்தன. இதையடுத்து வழக்கை திருச்சி பொருளாதார குற்றப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கை விசாரித்த பொருளாதார குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர், டிரான்ஸ்போர்ட் நிறுவன ஊழியர்கள், குடும்பத்தினர் என ஏற்கனவே 13 பேரை கைது செய்தும், 16 பேருந்துகள், 8 மினி பேருந்துகள், 6 டூ வீலர், 16 கார், ஒரு ஜே.சி.பி., 3 டிராக்டர் உள்ளிட்ட  பொருட்களும் பறிமுதல் செய்யப்பட் டூள்ளன. இந்நிலையில், கமாலுதீன் நண்பரும், தொழில் பங்குதாரருமான ஹாரீஸ் பிளக்ஸ் உரிமையாளரான, தஞ்சாவூரை சேர்ந்த அங்குராஜ் (41), என்பவர் ராஹத் நிறுவனத்தின் முதலீட்டில் இருந்து சொத்துக்களை வாங்கி குவித்தார். இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர் விசாரணை நடத்தி புதன்கிழமை இரவு அங்குராஜை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.