districts

மாணவர்கள் வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் தகவல்

தஞ்சாவூர், ஜூன் 11-

      மாணவர்கள் செல்போன் பயன்பாட்டை குறைத்து வாசிப்பு பழக் கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்  என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் கூறி னார்.  

     தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறி வியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ந.செல்வகுமார் கலந்து கொண்டு, கல்லூரி ஆண்டு மலரை வெளியிட்டு, கல்வி, கலை மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிப்  பேசினார்.

  அப்போது அவர் பேசியதாவது:

   இந்திய அளவில் மருத்துவத்தில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. பட்டமளிப்பு என்பது பட்டம் பெறும்  அனைவரின் வாழ்விலும், ஒரு முக்கிய மான விழாவாகும். முதல் நாள் மருத்துவக் கல்லூரியில் நுழைந்தது முதல் படிப்பை முடித்து வெளியே செல்லும் போது மருத்துவம் குறித்த  அறிவை நிறையப் பெற்று இருப்பீர்கள்.  படிப்பு மட்டுமே மருத்துவத் துறை யில் முடிவு கிடையாது.  

     தமிழகத்தில் தான் சிறந்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. 37 அரசு மருத்துவக்கல்லூரி, 20 தனியார் கல்லூரிகள் உள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மருத்துவர்களை உருவாக்கி வருகிறது. உலக சுகாதார அமைப்பு ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற வீதத்தில் இருந்தால் போதும் என்ற கூறும் நிலையில், தமி ழகத்தில் 834 நோயாளிகளுக்கு ஒரு  மருத்துவர் என்ற வீதத்தில் மருத்து வர்கள் உள்ளனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மிக பழமை யானது.”  

   இவ்வாறு அவர் பேசினார்.  மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப், தேசிய உணவு தொழில் நுட்ப நிறுவன  இயக்குநர் எம்.லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக கல்லூரி  மாணவர் மன்ற துணைத் தலைவர் மா. ராமச்சந்திரன் வரவேற்றார். முடிவில் மாணவர் ம.முகமது சுகைப் நன்றி கூறினார். பட்டமளிப்பு விழாவுடன், ஆண்டு  விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந் தது. இதற்காக, மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள விளையாட்டுத் திடலில், மேடை தயார் செய்யப்பட்டி ருந்தது. வெட்ட வெளியான இடத்தில், பட்டம் பெறும் மாணவர்கள், அவர்கள்  பெற்றோர்கள் அமர வைக்கப்பட்டிருந் தனர். மாலை நேரம் என்றாலும் வெயி லின் தாக்கத்தால் பெற்றோர்களும், மாணவர்களும் அவதிப்பட்டனர்.